வேர்ட் டிப்ஸ்-வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு:
வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் வேண்டும் என்றால் என்ன செய்திடலாம்? வேர்ட் தானாக இதனை அமைக்காது. அதன் மாறா நிலையில், குறிப்பிட்ட அளவில் அனைத்து செல்களையும் அமைத்துவிடும். எனவே, மேலே கூறியபடி அகலத்துடன் 12 செல்கள் கொண்ட டேபிள் ஒன்றை அமைக்க, ஒரு சுருக்கமான வழியைப் பார்ப்போம்.
1. மூன்று செல்கள் கொண்ட ஒரு வரிசை டேபிள் ஒன்றை உருவாக்கவும். இது உங்கள் டாகுமெண்ட்டின் ஒரு மார்ஜின் முனையிலிருந்து அடுத்த மார்ஜின் வரை நீட்டிக்கப்பட்டு கிடைக்கும்.
2. அடுத்து மவுஸைப் பயன்படுத்தி, முதல் இரண்டு செல்களின் அகலத்தினை நீங்களே சரி செய்திடுங்கள். எவ்வளவு அதிக அகலம் வேண்டுமோ, அவ்வளவு அகலத்தில் அமைத்திடுங்கள்.
3. மவுஸின் கர்சரை மூன்றாவது செல்லில் நிறுத்தவும்.
4. ரிப்பனுடைய Layout tab டேப்பினைத் திறக்கவும். மவுஸின் கர்சர் செல்லுக்குள் இருந்தால் தான், இந்த டேப் இருப்பது காட்டப்படும்.
5. அடுத்து Merge குரூப்பில், Split Cells என்ற டூலில் கிளிக் செய்திடவும்.
6. அடுத்து Number of Columns என்ற கண்ட்ரோலைப் பயன்படுத்தி, அந்த செல்லை பத்து செல்களாகப் பிரிக்க வேண்டும் என அமைக்கவும்.
7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எழுத்துக்களை அகலப்படுத்த: வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து பாண்ட் விண்டோவினைப் பெறவும். இதனை மெனு பாரில் Format கிளிக் செய்து முதல் பிரிவாக இருக்கும் Font என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம். இந்த விண்டோவில் பல டேப்கள் கிடைக்கும். இதில் Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Scale என்பதற்கு அருகில் உள்ள அளவு கட்டத்தில் ஏற்கனவே 100% என இருக்கும். இதனை 200% என அமைத்து ஓகே கிளிக் செய்து பார்த்தால் தேர்ந்தெடுத்த சொல்லில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகலமாக மாற்றப்பட்டு இருக்கும். இது உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால் அகல அளவின் சதவிகிதத்தைக் குறைக்கலாம்; கூடுதலாக வேண்டுமென்றால் உயர்த்தலாம்.
வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் சமீபத்தில் ‘கோடென்னா’ (goTenna) என்ற கருவி வெளியாகியுள்ளது.
சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கருவி எந்த செல்போன் நெட்வொர்க்கின் உதவியும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவல்லது. அதாவது, இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்திகளை பரிமாறலாம். மௌத்-ஆர்கன் போலத் தோற்ற மளிக்கும் இந்தக் கருவியின் மேல்புறத்தை ஆன்டெனா போல இழுத்துவிடலாம்.
நீண்ட தூரத்திலும் பயன்படுத்தும் வகையில் 151-154 MHz அலைவரிசையை இந்தக் கருவி பயன்படுத்துகிறது. 147mm உயரமும் 56.7 கிராம் எடையும் கொண்ட இந்தக் கருவி தண்ணீர் மற்றும் தூசிகள் உள்ளே செல்ல முடியாதபடி அமைக்கப் பட்டுள்ளது.
ஒரு இண்டிகேட்டர் லைட் மற்றும் ஃப்ளாஷ் மெமரியைக் கொண்டுள்ளது ‘கோடென்னா’. இந்த ஃப்ளாஷ் மெமரி பல்லாயிரக்கணக்கான மெசேஜ்களை சேமித்துக்கொள்ளும் தன்மையுடையது. லித்தியம்-ஐயான் (Lithiyum-ion) பேட்டரியைக் கொண்டுள்ள இந்தக் கருவியை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
இந்தக் கருவியை இரண்டு வெவ்வேறு இடத்தில் வைத்திருக்கும் நபர்கள் அவர்களது ஸ்மார்ட்போனில் ‘கோடென்னா’வை கட்டாயமாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். தற்சமயம் இந்தக் கருவி ஆப்பிளின் ‘ios’ மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களில் மட்டும்தான் கிடைக்கிறது. பரபரப்பான நகரத்தில் 2.5 கி.மீ தூரத்திலும், பாலைவனத்தில் 10 கி.மீ, வரையில் இந்தக் கருவியைக் கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.
அமெரிக்கச் சந்தையில் இரண்டு ‘கோடென்னா’ கருவிகள் $149.99 என்ற விலையில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் செல்போன் உலகத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.