Blackberry Z3 மிக விரைவில் அறிமுகம்- ப்ளக் இன் புரோகிராம் அப்டேட்
                  
                     12 Aug,2014
                  
                  
                      
					  
                     
						
			  வழமைக்கு மாறான வடிவமைப்புடன் Blackberry Z3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை Blackberry நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இக்கைப்பேசியினை மிக விரைவில் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா போன்ற பல நாடுகளிலும் அறிமுகம் செய்யவுள்ளது.

இக்கைப்பேசியானது 5 அங்குலெ அளவு, 540 x 960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Dual-Core Snapdragon 400 Processor, 1.5GB RAM மற்றுமு் 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
     ப்ளக் இன் புரோகிராம் அப்டேட்
ப்ளக் இன் (Plugin) புரோகிராம் நம் பிரவுசருடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் கூடுதல் புரோகிராம்களாகும். சில கூடுதல் வசதிகளைப் பெறுவதற்காக இவை இணைக்கப்படுகின்றன. மிகப் பிரபலமான ப்ளக் இன் புரோகிராம்கள் சிலவற்றைக் கூறுவதென்றால், அடோப் ப்ளாஷ், ஜாவா மற்றும் குயிக் டைம் பிளேயர் போன்றவற்றைக் கூறலாம். இவற்றை நாம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினால், தொடர்ந்து அப்டேட் செய்வதும் அவசியமாகிறது. இல்லை எனில் முழுமையான பயன் கிடைக்காதது மட்டுமின்றி, வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இவற்றின் வழியாக உங்கள் கம்ப்யூட்டர்களில் நுழைந்திடும் வாய்ப்புகளும் ஏற்படும்.
 
இவை அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்று ஒவ்வொரு ப்ளக் இன் புரோகிராமிற்கான இணைய தளம் சென்று சோதனை செய்வது சற்று கடினமானதுதான். இந்த வசதியை அனைத்து பிரவுசர்களுக்கும் தரும் வகையில் ஓர் இணைய தளம் இயங்குகிறது. இங்கு சென்று, நாம் பயன்படுத்தும் ப்ளக் இன் புரோகிராம்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்று கண்டறிவதுடன், அவை பாதுகாப்பானவையா என்றும் அறிந்து கொள்ளலாம். இதனையே கூட ப்ளக் இன் ஆகப் பயன்படுத்தலாம். அல்லது தனியாகவும் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி https://browsercheck.qualys.com/. 
இதனை இயக்கினால், நீங்கள் அப்போது பயன்படுத்தும் பிரவுசரை சோதனை செய்து, ப்ளக் இன் புரோகிராம்களை அப்டேட் செய்திடும். அதில் ஏதாவது சிக்கல் இருந்தால், தவறுகளை சரி செய்திடும். இவை அனைத்தும் உங்கள் அனுமதியுடனே நடத்தப்படும். பயன்படுத்தப்படும் பிரவுசர் மட்டுமின்றி, சிஸ்டத்தில் உள்ள அனைத்து பிரவுசர்களுக்கான ப்ளக் இன் புரோகிராம்களையும் சோதனை செய்திடும். 
ப்ளக் இன் புரோகிராம்கள் வழியே தான் பல வைரஸ் மற்றும் மால்வேர்கள் நம் கம்ப்யூட்டரில் நுழைகின்றன. எனவே, இது போன்ற ஒரு சோதனை நடத்தும் வசதி நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது.