ரௌட்டர் Router என்பது என்ன? - பிரவுசர் எக்ஸ்டன்ஷன் பிரச்னைகள்- விண்டோஸ் 7 – ஸ்டிக்கி நோட்ஸ்

12 Aug,2014
 

             இங்கு ரௌட்டர்கள் எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
ஒரு ரௌட்டர் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி (IP address) தேவை. நம் வீடுகளைப் போல, ஒவ்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.

 

பொதுவாக, ரௌட்டர் ஒன்றில் அதனை வயர் மூலம் மற்ற சாதனங்களுடன் இணைப்பதற்கு நான்கு போர்ட்கள் (4 Ethernet ports) தரப்பட்டிருக்கும். இந்த ரௌட்டர் வயர்லெஸ் ரௌட்டராக இருக்கும் பட்சத்தில், கூடுதலாக பல வயர்லெஸ் சாதனங்களை இணைக்கலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் இணையத்துடன் தனித்தனியே இணைக்கலாம். ஆனால், இணைய சேவை நிறுவனம் தரும்ஒரே ஒரு இணைய சேவை முகவரி மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் ரௌட்டர் மூலம் பல சாதனங்களுக்கிடையே இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சாதனத்தையும் ரௌட்டர் வழியே இணைத்த பின்னர், http://www.whati smyip.com/ என்ற முகவரிக்குச் சென்றால், உங்களுடைய ஐ.பி. முகவரி கிடைக்கும். இவற்றிலிருந்து எப்படி உங்களுடைய இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். லோக்கல் ஐ.பி. முகவரி வெவ்வேறாக இருக்கும். ஒவ்வொரு சாதனமும் ஒவ்வொன்றைக் காட்டும்.
ரௌட்டர் சாதனம் கூடுதல் பாதுகாப்பினையும் அளிக்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும் உங்கள் ரௌட்டர் தனி ஐ.பி. முகவரியினை அமைத்துத் தருகிறது. ஆனால், வெளியே இருந்து உங்கள் கம்ப்யூட்டர் இணைப்பினைப் பார்ப்பவர்கள், இணைய சேவை நிறுவனம் வழங்கும் பொதுவான ஐ.பி. முகவரியை மட்டுமே அறியமுடியும். இதனால், இணைய இணைப்பு பெற்ற மற்ற சாதனங்களின் முகவரிகளை யாரும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது.
ஒரு ரௌட்டர் ஹார்ட்வேர் பயர்வால் போலவும் செயல்படுகிறது. இதன் மூலம் வெளியிலிருந்து நம் கம்ப்யூட்டருக்கு வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களான மால்வேர் மற்றும் வைரஸ் ஆகியவற்றிற்கு எதிரான முதல் பாதுகாப்பு அரண் வழங்கப்படுகிறது. சில ரௌட்டர்களில், இது போன்ற பயர்வால் பாதுகாப்பு வழங்கும் சாப்ட்வேர் புரோகிராம்கள் பதிந்தே வழங்கப்படுகின்றன. சிலவற்றில் மேலும் பல பாதுகாப்பு வசதிகளும் தரப்படுகின்றன. குறிப்பாக, சிறுவர்களை இணையத்தில் பாதுகாக்க, பெற்றோர்கள் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு புரோகிராம்களும் கிடைக்கின்றன.
ரௌட்டர் பயன்பாட்டில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மோடம் செயல்பாட்டினை அனைத்து ரௌட்டர்களும் கொண்டி ருக்காது. ஒரு ரௌட்டர் தானாக இணைய இணைப்பினைத் தராது. ஒரு ரௌட்டர் அது ரௌட்டராகவும் மோடமாகவும் செயல்படும் என அதனைத் தயாரித்த நிறுவனம் அறிவிக்காதவரை, ரௌட்டரை மோடம் ஒன்றுடன் இணைத்தே நாம் இணைய இணைப்பினைப் பெற முடியும். இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனங்கள் நமக்கு மோடம் சாதனம் ஒன்றினை வழங்குகின்றன. எனவே, அதனுடன் இணைக்கலாம். ஆனால், மோடமாகவும் ரௌட்டராகவும் இயங்கும் ரௌட்டர் இருப்பின், அதில் நேரடியாக, இணைய சேவை நிறுவனத்தின் தொடர்பை இணைத்து இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
ஒரு சிலர், இணைய சேவை நிறுவனங்களிடம் மோடத்தினை வாடகைக்குப் பெறலாமா அல்லது விலைக்கு வாங்கிப் பயன்படுத்தலாமா என்று கேட்கின்றனர். நல்ல மோடம் அல்லது ரௌட்டர்கள் பழுதடைந்து இயங்காமல் இருப்பதில்லை. எனவே ஒன்றினை, குறிப்பாக ரௌட்டர் மற்றும் மோடம் இணைந்த சாதனம் ஒன்றை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது. இணைய இணைப்பு என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், ஏன் வீணாக வாடகைக்கு மோடத்தினைப் பெற வேண்டும். அப்படி ஒன்றை வாங்கும் முன், அந்த மோடம், நீங்கள் இணைப்பு பெறும் இணைய சேவை நிறுவனத்தின் சேவையுடன் இணைந்து செயல்படுமா என்பதனை அறிந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிரவுசர் எக்ஸ்டன்ஷன் பிரச்னைகள்


மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் வந்த பின்னர், மற்ற பிரவுசர் களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்கித் தந்தன. மற்றவர்களையும் உருவாக்க தூண்டின. இவற்றைத் தங்கள் இணைய தளத்தில் பதிந்து வைத்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவித்து வருகின்றன. இருப்பினும் இவையும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக, அல்லது அவற்றைத் தாங்கி வரும் புரோகிராம்களாக மாறி வருகின்றன. இவற்றை அறிந்து பாதுகாப்பாக இயங்குவது எப்படி என இங்கு பார்க்கலாம்.

 

பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் என்பது நம் இணைய பிரவுசரின் உள்ளாக இயங்கக் கூடிய சில குறியீடு வரிகள் அடங்கிய தொகுப்பாகும். இவை சில வேண்டத்தகாத செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன. டிஸ்பிளே விளம்பரங்கள் காட்டுவது, நாம் காணும் இணைய தளங்கள் எவை எனப் பின் தொடர்வது மற்றும் நம் பாஸ்வேர்ட், தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்றுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன.
ஒரு பாதுகாப்பான எக்ஸ்டன்ஷன் புரோகிராம் கூட தானாகவே அப்டேட் செய்து கொண்டு, மோசமான மால்வேர் புரோகிராமாக மாறக் கூடிய சந்தர்ப்பங்கள் இப்போது பெருகி வருகின்றன. குரோம் பிரவுசர், நாம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் காட்டப்படும் டயலாக் பாக்ஸ்களில் இதனைக் காட்டுகிறது. இந்தப் பிரச்னை குரோம் பிரவுசருக்கு மட்டுமின்றி, அனைத்து பிரவுசர்களுக்கும் உள்ளது. குறிப்பாக பயர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அனைத்தும் இந்த பிரச்னைகளை எதிர் கொள்கின்றன.
குரோம் வெப் ஸ்டோர் அல்லது மொஸில்லா ஆட் ஆன் ஆகிய தளங்களில் இருந்து, பிரவுசர் எக்ஸ்டன்ஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், உங்கள் பிரவுசரில் உள்ளாக இயங்கும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்கிறீர்கள். அப்போது குரோம் பிரவுசர், அது சிறிய ஆட் ஆன் புரோகிராமாக இருந்தாலும், பல்வேறு நிலைகளில் உங்களிடம் அனுமதி கேட்கிறது. மேலும் சிறிய வேலையை மேற்கொள்ளும் ஆட் ஆன் புரோகிராமாக இருந்தாலும், அது அனைத்து இணையதளப் பக்கங்களில் இருந்தும் உங்களுடைய தகவல்களை அணுகும் வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது. ஏனென்றால், அந்த சிறிய புரோகிராம் கூட, உங்கள் பிரவுசரின் உள்ளீடாக இயங்குகிறது.
இதிலிருந்து நம்மால் தப்பிக்க இயலவில்லை. இணைய தளங்களை நாம் விரும்பும் வகையில் மாற்றிக் கொடுக்கும் போது, அவை தாங்கள் விரும்பும் விளம்பரங்களை நுழைக்கும் வகையிலும் செயல்படுகின்றன. ஆனால், பயர்பாக்ஸ் பிரவுசர் இந்த வகையான எச்சரிக்கையை வழங்குவதில்லை. அதற்கெனப் பதியப்படும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், தன்னிச்சையாக, நம் தனித் தகவல்களைப் பெறும் வேலையில் ஈடுபடுகின்றன.
பல ஆட் ஆன் புரோகிராம்கள், இந்த பிரிவில் இயங்கி வரும் பெரிய நிறுவனங்களால் தயார் செய்து வழங்கப்படுகின்றன. இவை எல்லாம், தனி மனிதர் ஒருவர் தன் இச்சைக்கேற்ப உருவாக்கப்படும் புரோகிராம்களாகும். இவற்றில் சில, நீங்கள் இன்ஸ்டால் செய்கையில் நல்ல பாதுகாப்பான தன்மையுடனேயே இருக்கும். இவற்றை சில நிறுவனங்கள் பெற்று தங்கள் உரிமைப் பொருட்களாக வைத்துக் கொள்கின்றன. இந்த நிறுவனங்கள், தாங்கள் பணம் சம்பாதிக்க, நம்மைப் போன்றவர்களின் தனி நபர் தகவல்களை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் வழியாகப் பெற்று, விற்பனை செய்கின்றன. இதற்கு தங்களின் விளம்பரங்கள் வழியாக, ஏற்கனவே பாதுகாப்பானது என்று அறியப்பட்ட புரோகிராம்களில் மாற்றங்கள் செய்கின்றன. அல்லது இவற்றை அப்டேட் செய்திட வேண்டும் என்ற தகவலை அனுப்பி நம்மை அப்டேட் செய்திட வைக்கின்றன. அல்லது இன்ஸ்டால் செய்திடுகையில், தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கச் சொல்லி நம்மைத் தூண்டி, அவர்கள் வலையில் சிக்க வைக்கின்றன. இது போன்ற கெடுதலை விளைவிக்கும் பல ஆட் ஆன் புரோகிராம்கள் குரோம் வெப் ஸ்டோரில் இன்னும் இருக்கின்றன என்று இந்த பிரிவினைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. வங்கிகளின் இணைய தளங்களை நாம் அணுகிச் செயல்படுகையில், இவை நம் கிரெடிட் கார்ட் எண், அக்கவுண்ட் பாஸ்வேர்ட் ஆகியவற்றை எளிதாகத் திருடி அனுப்புகின்றன.
பிரவுசர் எக்ஸ்டன்ஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வது என்பது, அப்ளிகேஷன் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதற்கு இணையாகும். எனவே, அவை நம்பகத் தன்மை கொண்டவையா என நாம் முதலில் ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டும். முதலில் உண்மையானவை என அறியப்பட்டாலும், பின்னாளில் இவை மற்ற நிறுவனங்களிடம் செல்கையில், மோசமானதாக மாறக் கூடியவை என்பதால், இதனை இன்ஸ்டால் செய்த பின்னரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நம்மிடம் அனுமதி பெறாமல், அப்டேட் செய்திட அனுமதிக்கக் கூடாது.
அப்டேட் செய்யப்படும் விஷயத்தில், கூகுள் அல்லது மொஸில்லா போன்ற நிறுவனங்கள் தாங்களாக உருவாக்கித் தந்துள்ள ஆட் ஆன் புரோகிராம்கள் பாதுகாப்பானவையாக வே இருக்கும். இந்த நிறுவனப் புரோகிராம்களுக்குக் கூட கூடுதல் வசதி தருவதாக சில ஆட் ஆன் புரோகிராம்கள் நமக்குக் காட்டப்படும். இவற்றை மற்ற சில தர்ட் பார்ட்டி நிறுவனங்கள் வழங்கும். இவற்றைப் பயன்படுத்தவே கூடாது.
எக்ஸ்டன்ஷன் புரோகிராம் ஒன்றை எத்தனை பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி உள்ளனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஒரு புரோகிராம் தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை ஒதுக்கிவிட வேண்டும். அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தப்பட்டு வரும் புரோகிராம்கள் குறித்த பின்னூட்டு தகவல்களையும் ஆய்வு செய்து, அவை நல்லவிதமாக இருந்தால் மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். இவற்றிலும் கூட பின்னாளில், பிரச்னைகள் ஏற்படலாம்.
எப்படி இருந்தாலும், நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் குறித்து எப்போதும் நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் 30 எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, அவற்றில் பலவற்றைப் பயன்படுத்தவில்லை எனில், பயன்படுத்தாதவற்றை உடனே நீக்கிவிட வேண்டும். பயன்பாட்டில் உள்ளவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பாக உள்ளதா எனக் கண்காணிக்க வேண்டும்.
எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்தும் தன்மை கொண்டவையாகும். எனவே, குறைந்த அளவில், தேவையான புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விண்டோஸ் 7 – ஸ்டிக்கி நோட்ஸ்விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் புதிய வசதிகளில், மேம்படுத்தபப்ட்ட ஸ்டிக்கி நோட்ஸ் என்னும் வசதி குறிப்பிடத்தக்கதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து பல வாசகர்களும் நமக்கு எழுதி உள்ளனர். அனைவரும் அறியும் வண்ணம் அது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
ஸ்டிக்கி நோட்ஸ் மூலம், நாம் கம்ப்யூட்டர் திரையில், குறிப்புகளை எழுதி வைக்கலாம். இதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இதனை இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில் காட்டப்படும். இதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் குறிப்பினை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும். நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் ("+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.

 

ஸ்டிக்கி நோட் இயக்கத்தைத் தொடங்கியவுடன், டாஸ்க் பாரில் இதற்கான பட்டன் தோன்றுவதனைக் காணலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து ஸ்டிக்கி நோட்களையும், மினிமைஸ் செய்து வைக்கலாம். அதே போல, இதன் மீது கிளிக் செய்தால், அவை இயக்கப்பட்டு, திரையில் தோன்றும். நோட் ஒன்றை உருவாக்கியவுடன், அது தானாகவே சேவ் செய்யப்படும். அதாவது, எங்கே எழுதி வைத்தது மீண்டும் கிடைக்காதோ என்ற பயமின்றி அதனை மூடலாம். நோட்டினை மூடி வைக்க, ரைட் கிளிக் செய்து, Close Window கட்டளையைத் தேர்வு செய்து கிளிக் செய்திடலாம். மீண்டும் ஸ்டிக்கி நோட் கட்டளையை இயக் குகையில், அனைத்து ஸ்டிக்கி நோட்களும் திரையில் தோன்றும்.
ஸ்டிக்கி நோட் தோன்றுகையில், அதன் மாறா நிலையில் உள்ள எழுத்து வகையில் இருக்கும். இதனையும் நீங்கள் விரும்பும் எழுத்து வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை ஸ்டிக்கி நோட்டிற்கும், ஒரு எழுத்து வகையினைக் கையாளலாம். எழுத்தை மாற்ற, எந்த ஒரு முறையான வழியும் இதில் தரப்படவில்லை. எனவே நீங்கள் மாற விரும்பும் எழுத்தில் அமைக்கப்பட்ட ஒரு சொல்லினை இதில் காப்பி செய்தால், அந்த எழுத்திலேயே தொடர்ந்து ஸ்டிக்கி நோட் அமைக்கலாம். நீங்கள் எந்த எழுத்தில் நோட் அமைக்கிறீர்களோ, அந்த எழுத்தே, மாறா நிலையில் உள்ள எழுத்தாக அமைந்திடும். தொடர்ந்து அதனையே பயன்படுத்தி டைப் செய்துவிடலாம்.
நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் பார்மட் செய்வது போல, அழுத்தம், சாய்வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். (Ctrl+B, Ctrl+I, Ctrl+T, Ctrl+U etc.,)
நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா, மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்ப பாட்டை நாம் தேர்ந்தெடுப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு, ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.
இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால், சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:\Users\ {username}\AppData\Roaming\Microsoft\ Sticky Notes என்ற போல்டரில் காணலாம்.Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies