காரைச் செலுத்தும் போது சாரதி உறங்கினால் எச்சரிக்கும் ஆசனப் பட்டி - ஸ்பெயின் விஞ்ஞானிகளால் உருவாக்கம்
28 Jul,2014
காரைச் செலுத்தும் போது சாரதி உறுங்கினால் எச்சரிக்கும் ஆசனப் பட்டியொன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஸ்பெயினின் வலென்சியா நகரிலுள்ள உயிரியல் பொறியியல் நிறுவகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஹார்கென் என அழைக்கப்படும் இந்த ஆசனப் பட்டியிலுள்ள உணர்க் கருவிகள் சாரதியின் இருதய துடிப்பு மற்றும் சுவாச செயற்கிரமம் என்பற்றை கணிப்பிட்டு சாரதி உறங்கும் நிலைக்குச் செல்லும்போது எச்சரிக்கை ஒலியை பிறப்பிக்கின்றது.
மேற்படி எச்சரிக்கை ஒலியை கேட்டு சாரதி விழிப்பு நிலைக்குத் திரும்பும் போது அந்த எச்சரிக்கை ஒலி சுய இயக்க அடிப்படையில் நின்று விடுகிறது.