
எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வரு கிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும். நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.
சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து பணியாற்றலாம்.
இப்போது ஒரு சந்தேகம் உங்களூக்கு வரலாம்? மறைக்கப்பட்ட பைலை மீண்டும் கொண்டு வராமல் எக்ஸெல் புரோகிராமை மூடிவிட்டால் என்ன நடக்கும்? அடிப்படையில் பார்க்கையில் எக்ஸெல் புரோகிராமை மூடும்போது, அப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைலை பதியவா என்று கேட்கும். மற்ற பைல்களை மூடும்போது சேவ் செய்ய அல்லது வேண்டாம் என நினைத்தால் அதற்கேற்றார்போல் யெஸ் / நோ கொடுத்து வெளியேறலாம்.
இங்கே வேறுபாடு என்னவென்றால் நீங்கள் மறைத்து பின் மீண்டும் திறக்காமல் விட்ட பைலைத் திறக்க பின்னொருமுறை கட்டளை கொடுத்தால், பைல் திறந்து உடனே மறைக்கப்பட்டுவிடும். மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் பட்டனை அழுத்த பைல் மீண்டும் பயன்படுத்தக் கிடைக்கும். எனவே அய்யோ போய்விட்டதே! என்ற கவலை வேண்டாம்.
லக்கி டிராஸ உஷார்!
மெயில் அனுப்பும்போது பிசிசி (bcc) என்கிற வகையில் அனுப்பினால், ஒருவரின் ஐ.டி மற்றவருக்குத் தெரியாது. டூ (to) மற்றும் சிசி (cc) மூலமாக அனுப்பினால், அனைவருக்கும் மற்றவர்களின் மெயில் ஐ.டி தெரிந்துவிடும். அதை அவர்கள் தங்களின் நட்பு வட்டத்துக்கு ஃபார்வர்டு செய்யும்போது, முகம் தெரியாத பலரின் பார்வைக்கும் அனைவரின் ‘ஐ.டி’யும் சென்று சேரும். இது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்க வாய்ப்பு உண்டு.
அலைபேசியில் உள்ள ‘ப்ளூ டூத்’ வசதியை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து, பின் மறக்காமல் ‘ஆஃப்’ செய்துவிட வேண்டும். மறந்தால், அனைத்து விவரங்களும் மற்றவர்களின் அலைபேசிகளுக்கு தானாகவே செல்லக்கூடும்.
டெபிட்/கிரெடிட் கார்டு ஆகியவற்றின் பின்பக்கத்தில், அவற்றின் பின் நம்பரை எழுதாதீர்கள். பெட்ரோல் பங்க், கடைகள் என்று எங்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினாலும், கார்டை பணியாளரிடம் கொடுத்து, கையோடு திரும்பப் பெறுங்கள். ஏனெனில், டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடும் ஸ்கேனர்கள் நிறைவே இருக்கின்றன.
தியேட்டர், மால்கள், திருவிழாக்கள் என்று பல இடங்களிலும் நின்று கொண்டு, ‘லக்கி டிராஸ உங்கள் மொபைல் எண், இ-மெயில் ஐ.டி மட்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டு சிலர் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இதைச் செய்து கொண்டிருப்பார்கள். என்றாலும், நீங்கள் அவர்களிடம் கொடுத்த தகவல்கள், அடுத்தவருக்குச் செல்லாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
வலைதளத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கமுடியும் என்பது போலிகளுக்கு வசதியாக இருக்கிறது. ‘வேலை வாங்கித் தருகிறோம்ஸ கடன் தருகிறோம்ஸ தொழில்கற்றுத் தருகிறோம்ஸ’ என்று எப்படி வேண்டுமானாலும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடமுடியும். உஷார்ஸ உஷார்.
ஒரு வங்கி அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் வலைதளம் போலவே போலியான வலைதளத்தை உருவாக்கி, நம்முடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை திருடும் ‘ஃபிஷிங்’ வேலைகளும் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குள் நீங்கள் சென்றதுமேஸ முகவரி இருக்கும் பகுதியில் பூட்டு வடிவம் ஒன்று தோன்றுவதுடன், முகவரி மற்றும் அந்த பூட்டு இருக்கும் பகுதியின் பின்புலமானது பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். இதை வைத்தே, ஒரிஜினல் என்று உறுதி செய்யலாம்.
டூப்ளிகேட் ஏ.டி.எம் மெஷின் அறிவீர்களா?!
இன்றைக்கு சந்துபொந்துகளில்கூட ஏ.டி.எம் மெஷின்கள் உள்ளன. அதில் சில, நாம் கேள்விப்படாத வங்கியின் பெயரில் இருக்கும். அவற்றில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது கூடாது. காரணம், ஒருவேளை அது மோசடி ஏ.டி.எம் ஆகவும் இருக்கக் கூடும். அதில் நம் டெபிட் கார்டை செருகினால், பணம் வரும், அல்லது மெஷினில் பணம் இல்லை என்கிற தகவல் வரும். ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள், நம் கார்டை ஒருவித ‘ஸ்கேனர்’ மூலம் சதிகாரர்கள் ஸ்கேன் செய்து, டூப்ளிகேட் கார்டு உருவாக்கிவிடுவார்கள்.
நம் அக்கவுன்டில் உள்ள பணம் அத்தனையும் கொள்ளையடிக்கப்படும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீரில் நடந்த ஒரு பெரும் நிகழ்ச்சியின்போது, இத்தகைய ஏ.டி.எம் அமைக்கப்பட்டு, கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது