ஆடம்பரமான சிறிய ரக விமானத்தை வடிவமைத்தது ஹொண்டா
26 May,2014
மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஜப்பான் நிறுவனமான ஹொண்டா 6 பேர் பயணிக்கக்கூடிய ஆடம்பர விமானத்தினை வடிவமைத்துள்ளது.
2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட HondaJet திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த விமானம் மணிக்கும் 420 மைல்கள் தூரம் பயணம் செய்யக்கூடியது.
சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறமதியான இந்த விமானம் அடுத்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தவிர 2017ம் ஆண்டளவில் ஸ்டார் வார் (Star War) திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஹுவர் பைக்கினை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹொண்டா தெரிவித்துள்ளது.