வேர்ட் டிப்ஸ்-வேர்டில் ரூலர்:எண்களை எழுத்தால் எழுத

29 Apr,2014
 

வேர்ட் டிப்ஸ்-வேர்டில் ரூலர்:எண்களை எழுத்தால் எழுத


வேர்டில் ரூலர்: வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் போது, அந்த விண்டோவில் மேலாக, ரூலர் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, நாம் டாகுமெண்ட்டின் பார்மட்டிங் விஷயங்களை சரி செய்திடலாம். பக்கங்களைச் சீராக அமைக்கலாம். குறிப்பாக மவுஸ் பயன்படுத்தி இயக்குகையில் இதன் பயன்பாடு அதிகம்.
அதே நேரத்தில், இந்த ரூலர், வேர்ட் விண்டோவில் காட்டப்பட வேண்டுமா என்பதனையும் நீங்கள் முடிவு செய்திடலாம். இதனை மேற்கொள்ள, ரிப்பனில் வியூ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Show குரூப்பில் Ruler செக் பாக்ஸ்ஜ் பார்க்கவும். இந்த செக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால், ரூலர் காட்டப்படும். டிக் அடையாளத்தை நீக்கிவிட்டால், ரூலர் மறைந்துவிடும்.

 

சொற்களை எண்ணுவதில் பலவகை வசதிகள்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும் என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.
டெக்ஸ்ட் எதனையும் தனியாக செலக்ட் செய்யாத பட்சத்தில் முழு டெக்ஸ்ட்டின் சொற்களும் மீண்டும் எண்ணப்பட்டு விடை கிடைக்கும். உங்களுக்கு எத்தனை சொற்கள் என்று சொல்கின்ற சிறிய விண்டோவில் உள்ள சிறிய தலை கீழ் அம்புக் குறியினைக் கிளிக் செய்தால் மேலும் 5 விதமான விடைகள் இருக்கும். இடைவெளி இல்லாமல் எத்தனை கேரக்டர்கள் பயன் படுத்தப் பட்டுள்ளன, இடைவெளி யுடன் உள்ள கேரக்டர்களின் எண்ணிக்கை என்ன, எத்தனை வரிகள், எத்தனை பக்கங்கள் மற்றும் எத்தனை பக்கங்கள் என்ற விவரங்கள் காட்டப்படும். இது ஒரு புளோட்டிங் டூல் பாராக இருக்கும். இதனை மானிட்டரில் எந்த பகுதியில் வேண்டுமென்றாலும் இழுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த வசதியினை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த டூல் பாரினை இழுத்துச் சென்று மேலே உள்ள டூல்பாருடன் இணைத்துவிட்டால் அது அங்கேயே தங்கிவிடும்.
வேர்ட் 2007 பயன்படுத்தினால், எந்த டூலையும் நீங்கள் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. டாகுமெண்ட்டின் கீழாக உள்ள அதன் ஸ்டேட்டஸ் பாரில், டாகுமெண்ட்டில் எத்தனை சொற்கள் உள்ளன என்பது எப்போதும் காட்டப் பட்டுக் கொண்டே இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, அவை மொத்தம் எத்தனை என்று அறிய விரும்பினால், அங்கேயே அதுவும் காட்டப்படும். டாகுமெண்ட்டில் உள்ள மொத்த சொற்களில், எத்தனை சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும்.
பாரா வடிவமைப்பை மற்றவற்றிற்கு அமைக்க: வேர்ட் தொகுப்பில் கூடுதல் பயன்களைத் தரும் ஒரு சாதனம் பார்மட் பெயிண்டர் என்னும் வசதி ஆகும். இதன் மூலம் ஒரு பாரா பார்மட்டினை இன்னொரு பாராவிற்கு மாற்றலாம். முதலில் எந்த பாராவின் பார்மட்டினைக் காப்பி செய்து இன்னொரு பாராவிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திடவும். பின் டூல் பாரில் பார்மட் பெயிண்டர் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் எந்த பாராவில் இந்த பார்மட்டினைச் செலுத்த வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதே பார்மட்டைத் தொடர்ந்து காப்பி செய்திட பார்மட் பெயிண்டரில் டபுள் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் பார்மட் பெயிண்டரை குளோஸ் செய்திடும் வரை இந்த பார்மட் தொடர்ந்து காப்பி ஆகும். குளோஸ் செய்திட பார்மட் பெயிண்டரில் இன்னொரு முறை கிளிக் செய்திட வேண்டும். அல்லது எஸ்கேப் கீயினை அழுத்த வேண்டும்.
வேர்ட் 2007 தொகுப்பில், பார்மட் பெயிண்டர் பெற, ஹோம் டேப்பில், கிளிப் போர்ட் பிரிவில், வலது மூலையில் இருக்கும் பார்மட் பெயிண்டர் சென்று, மேலே காட்டப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்படுத்தலாம். இந்த ஐகான், பெயிண்ட் பிரஷ் ஐகானாகக் கிடைக்கும்.


வேர்ட் டிப்ஸ்-வேர்டில் எண்களை எழுத்தால் எழுத


வேர்டில் எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. "He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் "He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

 

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.
கடைசிப் பைலுடன் வேர்ட் திறக்க: வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம். பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக்கும் பைல் அதுவா கத்தான் இருக்கும். அல்லது ரீசன்ட்லி யூஸ்டு பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் பயன்படுத்திய பைலைப் பெற்று கிளிக் செய்து, பின்னர் இயக்கலாம். இந்த கிளிக்குகளை மிச்சம் செய்திடும் வகையில், ஒரு செட்டிங்ஸ் அமைத்தால், வேர்ட் புரோகிராம் திறக்கும் போதே, இறுதியாக நாம் பயன்படுத்திய பைலுடன் வேர்ட் இயங்கத் தொடங்கும். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும்.
2. ரன் தேர்ந்தெடுக்கவும்.
3.இறுதியில் தரப்பட்டுள்ளதை அப்படியே டைப் செய்திடவும்: winword.exe /mFile1
4.ஓகே கிளிக் செய்திடவும்.
இதில் தரப்பட்டுள்ள /m ஸ்விட்ச் ஒரு மேக்ரோ அல்லது கட்டளையை இயக்கும். இந்த இடத்தில், File1 என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட ஒரு பெயர். ஒரு பைலின் பெயர் என்னவாக இருந்தாலும், இதுவே பெயராக மாறும். இதனை அடுத்து,
1. விண்டோஸ் எக்ஸ்புளோரரில், winword. exe என்ற பைலைக் கண்டறியவும். இது வழக்கமாக, C:\Program Files\Microsoft Office\Office\ folder என்ற இடத்தில் கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Create Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கும். இது பட்டியலின் இறுதியாகக் காட்டப்படும். பின்னர், புதிய ஷார்ட்கட்டில் ரைட் கிளிக் செய்து Send To Desktop என்பதைத் தேர்ந் தெடுக்கவும்.
4. இனி டெஸ்க்டாப்பில், புதிய ஷார்ட்கட் ஐகானைக் கண்டறியவும்.
5. இதில் ரைட் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுக்கவும்.
6. ஷார்ட்கட் டேப்பில், /mFile1 என்ற ஸ்விட்சை ஸ்ட்ரிங்குடன் இணைக்கவும்.
7.ஓகே கிளிக் செய்திடவும்.
இந்த ஷார்ட்கட்டைப் பயன்படுத்தி, எப்போ தெல்லாம், வேர்ட் திறக்கப்படுகிறதோ, இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட பைலுட னேயே, வேர்ட் திறக்கப்படும்.
ஓர் எச்சரிக்கை. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேர்ட் புரோகிராம் பயன்படுத்துபவராக இருந்தால், மேலே 1ல் காட்டப்பட்டுள்ள இடத்தில் சரியான போல்டரின் பெயரைத் தர வேண்டியதிருக்கும்.

 

எக்ஸெல் டிப்ஸ்


எந்த செல்லில் கர்சர் உள்ளது?: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டிய திருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டி ருந்தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு, செயல்படும் அந்த செல் உள்ளது என்று அறியாமல், ஸ்குரோலிங் பார் அல்லது அம்புக் குறி கீகளை அழுத்தியவாறு தேடுவோம்.
இந்த பிரச்னைக்கு ஒரு சிறிய தீர்வு ஒன்று உள்ளது. ஒன்றல்ல, இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சற்று சுற்றுவழி. உங்களுக்கு நீங்கள் இருந்த செல் அட்ரஸ் அல்லது அதன் பெயர் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தால், [Ctrl]+G கீகளை அழுத்தி, பின்னர் செல் எண் அல்லது பெயர் டைப் செய்து என்டர் அழுத்த, அந்த செல் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், நாம் பெரும்பாலும், செல்லின் எண் அல்லது பெயரை நினைவில் வைத்திருக்க மாட்டோம். அந்த சூழ்நிலையில், கண்ட்ரோல்+பேக் ஸ்பேஸ் அழுத்துங்கள். ஜில் என்று, நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த செல்லுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
இதனைச் செயல்படுத்த, நீங்கள் கர்சரை வைத்திருக்கும் செல், மானிட்டர் திரையில் இருக்கக் கூடாது. அப்போதுதான், அந்த செல் கிடைக்கும்படி, மானிட்டரில் திரைக் காட்சி மாற்றப்படும். கர்சர் இருக்கும் செல், மானிட்டர் திரையில் இருந்தால், நீங்கள் கண்ட்ரோல் மற்றும் பேக் ஸ்பேஸ் அழுத்துகையில், திரைக் காட்சி அப்படியே தான் இருக்கும். ஏனென்றால், அந்த செல் தான் உங்கள் முன் காட்டப்படுகிறதே.

 

எனவே இந்தக் கட்டளையினை சோதித்துப் பார்க்க விரும்பினால், செல் ஒன்றில் கர்சரை வைத்துவிட்டு, பின் ஸ்குரோல் பார் மூலம் அல்லது வேறு வழிகளில் சற்றுக் கீழாகச் செல்லுங்கள். அதன் பின் இந்தக் கட்டளை கொடுத்துப் பாருங்கள்.

டேப்பின் பரிமாணத்தை மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2.அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக் செய்திடவும். 3. Personalization பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் செய்திடவும். 4. அடுத்து Advanced Appearance Settings என்பதில் கிளிக் செய்திடவும். 5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது எக்ஸெல் ஒர்க்ஷீட் டேப்களின் அளவு நீங்கள் செட் செய்தபடி அமையும். இதில் என்ன பிரச்னை என்றால், உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களில் தரப்பட்டுள்ள ஸ்குரோல் பார்களின் அளவும் மாற்றப்பட்டிருக்கும். சற்று பெரியதாக உள்ள ஸ்குரோல்பாரினை நீங்கள் பயன்படுத்தப் பழக வேண்டியதிருக்கும்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2. இதில் Display என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். 3. இங்கு Appearance என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். 4. பின்னர், கீழாக வலது புறம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும். 5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies