டவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா? "wednesday” என டைப் செய்தால்

30 Mar,2014
 

 

வுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா?


நீங்கள் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, "Yourantivirus will complain that this download is a virus, but don’t worry — it’s a false positive.” என செய்தி கிடைக்கும். ""உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி” என்ற பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, "எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். சரியான உண்மையை எப்படி அறிவது? இது சரிதான் என்று நீங்கள் எண்ணி, டவுண்லோட் செய்தாலும், ஏன், இது போன்ற செய்தியைக் கூறியே, மால்வேர்களைச் சிலர் நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பலாமே என்ற சந்தேகமும் நமக்குக் கிடைக்கும். பின் எப்படித்தான் சந்தேகத்தினைத் தீர்த்துக் கொள்ளலாம்?

 

1. வைரஸ் டோட்டல் அனுப்பவும்: அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் ஒரே தப்பை செய்திடாது. எனவே, டவுண்லோட் ஆகும் பைலைத் திறந்து பார்க்காமல், https://www.virustotal.com/ என்ற இணையதளம் செல்லவும். சந்தேகத்திற்கு இடமான பைலை அப்லோட் செய்திடவும். இங்கு 45 வெவ்வேறான ஆண்ட்டி வைரஸ் கொண்டு, உங்கள் பைலில் வைரஸ் உள்ளதா எனச் சோதனையிடப்பட்டு, முடிவுகள் காட்டப்படும். சில முடிவுகள், வைரஸ் என்று சொன்னால், நிச்சயம் அந்த பைலைச் சந்தேகப்பட வேண்டும்.
2.டவுண்லோட் செய்த தளத்தை சந்தேகப்படு: வைரஸ் உள்ளது எனச் சந்தேகப்பட்டால், எந்த தளத்திலிருந்து இந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டதோ, அந்த தளத்தைச் சந்தேகப்பட வேண்டியதுதான். நீங்கள் கூகுள் தேடல் மூலம் இந்த பைல் இருக்கும் தளத்தை அறிந்து, அந்த பைலை இன்னொரு தர்ட் பார்ட்டி தளத்திலிருந்து பெற்றிருந்தால், நிச்சயம் அது வைரஸாக இருக்கலாம். ஆனால், பைல் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்தே பெற்றிருந்தால், இணைய தளம், வைரஸால் தாக்கப்பட்டு, போலியான ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும்.
3.மால்வேர் குறித்து சோதனை: உங்களுடைய ஆண்ட்டி வைரஸ், குறிப்பிட்ட பைலை மால்வேர் எனக் குறிப்பிட்டால், நிச்சயம் அதற்கு ஒரு பெயரைச் சுட்டிக் காட்டும்.இந்த பெயரை, கூகுள் தேடல் தளத்தில் கொடுத்துத் தேடினால், இந்த வைரஸ் பற்றிய தகவல்களும், அது எப்படி எல்லாம் பரவுகிறது என்றும் தகவல்கள் கிடைக்கும். இவற்றைக் கொண்டு, அந்த பைல் மற்றும் அது கொண்டு வரும் வைரஸ் குறித்து அறியலாம்.
ஆனால், பொதுவான ஓர் எச்சரிக்கையை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு வகையில், பைல் ஒன்று வைரஸ் ஆக இருக்கும் என அறிந்தால், அதனை இயக்காமல் இருப்பது நல்லது. இறக்கியிருந்தால், அழித்துவிடுவது நல்லது.

 

கிழமையினை டைப் செய்திட: வேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல்

 

எழுத்து கேப்பிடல் எழுத்தாக மாற்றப்படும். "wednesday” என டைப் செய்தால் "Wednesday” என மாற்றப்படும்.

புல்லட் பாய்ண்ட்ஸ்: வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும், புல்லட் பாய்ண்ட்ஸ் பயன் படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்து விடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.

டாகுமெண்ட் தொடக்கமும் முடிவும்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத்திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத் தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்: வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.
1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்திடவும். அப்போது Context menu ஒன்று கிடைக்கும்.
2. இந்த மெனுவில் Text Direction என்பதனைத் தேர்வு செய்திடவும். டெக்ஸ்ட் டைரக்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் எந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எண்ணியபடி அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செயல்பாட்டினை, வேர்ட் தரும் ரிப்பனில் உள்ள லே அவுட் டேப்பினைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளலாம். இதற்கும் மேலே கூறியபடி, கர்சரை செல்லில் வைத்திடவும். அடுத்து, ரிப்பனில், லே அவுட் டேப்பினைத் திறக்கவும். இதில் கிடைக்கும் Alignment groupல், Text Direction என்ற டூலினைத் திறக்கவும். நீங்கள் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை, இதில் கிளிக் செய்து கொண்டே இருக்கவும். டெக்ஸ்ட் குறிப்பிட்ட கோணத்தில் வந்தவுடன், வெளியேறி ஓகே கிளிக் செய்திடவும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies