2013 ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களும்

08 Mar,2014
 

2013  ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பிரவுசர்களும்


சென்ற ஆண்டின் இறுதியில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இறுதியாக, மக்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையினை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களின் பக்கம் செல்வது தெரிய வந்தது. இதனை http://www.netmarketshare.com/ என்ற தளம் தெரிவித்துள்ளது.
உலக அளவில், எக்ஸ்பி பயன்பாடு 29 சதவீதத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்தத்தில் 2 சதவீதக் கம்ப்யூட்டர்களே,

 

எக்ஸ்பியிலிருந்து மாறின. ஆனால், ஜூலை தொடங்கிய காலத்தில், எக்ஸ்பியை விட்டு விலகியவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இப்படியே சென்றால், விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் கைவிடப்படும் நாளில், 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கலே, எக்ஸ்பியைப் பயன்படுத்தி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் எக்ஸ்பி விடுபட்ட இடத்தை விண்டோஸ் 7 மற்றும் 8 பிடித்துக் கொண்டன. விண்டோஸ் 7 உயர்ந்து 47.5 சதவீதம் ஆகியது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இணைந்து 10.1 சதவீத இடத்தைக் கொண்டிருந்தன.
2013 ஆம் ஆண்டின் இறுதியில் இரு பிரிவுகள் தெளிவாகத் தெரிந்தன. விஸ்டா மற்றும் எக்ஸ்பி இணைந்து 32 சதவீத இடத்தையும், விண்டோஸ் 7 மற்றும் 8 இணைந்து 58 சதவீத இடத்தையும் கொண்டிருந்தன.
வரும் ஆண்டில், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை சற்று சரியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, 2014ல், 30 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை, தங்கள் இணைய தளத்திலிருந்து அப்டேட் செய்திடும் பழக்கத்திற்கு வளைத்துள்ளனர். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்குப் பலர் விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து அப்டேட் செய்துள்ளனர். இந்த இரண்டு சிஸ்டங்களின் மொத்தத்தில், 8.1க்கு அப்டேட் செய்தவர்கள் எண்ணிக்கை 34.4 சதவீதமாக இருந்தது.
இதே போல, ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 39 சதவீதம் பேர் தங்கள் சிஸ்டத்தினை அப்டேட் செய்துள்ளனர். உலக அளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டத்தினை 7.5 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த அளவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக லாபம் தருவதாகவும் உள்ளது.
ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) அமைப்பின் கண்காணிப்பு மற்றும் ஆய்வும் இதே தகவலைத் தெரிவிக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு 57.8%, விண்டோஸ் 8 சிஸ்டம் 10.35%, எக்ஸ்பி 20%க்கும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரவுசர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆண்டின் இறுதியில் 2.5% உயர்ந்து, மொத்தத்தில் 58% பங்கினைக் கொண்டிருந்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம், முறையே இரண்டாவது (18.4%) மற்றும் மூன்றாவது (16.2%) இடத்தில் இருந்தன.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 மற்றும் 7 மிகவும் குறைவான பயன்பாட்டிலேயே இருந்தன. மொத்தத்தில் இவை 6.6 சதவீதப்பங்கினைக் கொண்டிருந்தன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பிரவுசர் என்ற இடத்தைப் பெற்றிருந்தது. இதன் பங்கீடு 20.6%. ஆனால், ஆண்டு இறுதியில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் பங்கு 21.5% ஆக உயர்ந்திருந்தது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டதால், இந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது. விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் மாறா நிலை பிரவுசராகத் தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயங்கி வருகிறது.

வேர்டில் கவனித்தீர்களா!

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பணி ஆகும். ஆனால், பலர் கீழே நான் தரப்போவதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள். பொதுவாக நீங்கள் ஒரு வாக்கியத்தை முடித்து முற்றுப் புள்ளி வைத்தவுடன், அடுத்த வாக்கியத்தைத் தொடங்குகையில் முதல் சொல்லின் முதல் எழுத்து தானாகவே பெரிய எழுத்து என்று சொல்லப்படும் கேப்பிடல் லெட்டரில் தொடங்கும். ஆனால், ஒரு வாக்கியம் ஏதேனும் ஒரு எண்ணுடன் முடிந்தாலோ, அல்லது "you” என்ற சொல்லுடன் முடிந்தாலோ, அடுத்த வாக்கியம் அது போல கேப்பிடல் எழுத்துடன் தொடங்காது. (இதைப் படித்தவுடனேயே வேர்டைத் திறந்து செக் செய்திடப் போகவேண்டாம். தொடர்ந்து படிக்கவும்)

 

இவை இரண்டும் ஒரே மாதிரியான பிரச்னை போலத் தோற்றமளித்தாலும், இரண்டின் தன்மையும், தீர்வுகளும் வெவ்வேறானவை. அவற்றை இங்கு பார்க்கலாம். தூணித என்ற சொல்லை அடுத்து வரும் வாக்கியம் பெரிய எழுத்தில் தொடங்காததற்கு AutoCorrect ன் exclude என்ற பைலில் பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, கீழ்க்கண்டபடி செயலாற்றவும். நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். Office பட்டன் அழுத்தி Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து AutoCorrect Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. இங்கு Exceptions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து AutoCorrect Exceptions என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
5. இனி First Letter என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தனித்து இடம் பெறும் சொற்களின் பட்டியல் கிடைக்கும். இதில் "you” என்ற சொல்லைத் தேடிப் பெறவும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.
7. அடுத்து Delete என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த சொல்லுக்கான தனித்தன்மை நீக்கப்பட்டது. திறந்திருக்கும் அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடவும்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சொற்கள் அல்லது சுருக்கக் குறிகள் இடம் பெறும்போது, அடுத்த வாக்கியத்தின் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அமையாது. வழக்கமாக Mr., Ms., Dr., என்ற சுருக்கு சொற்களே இடம் பெறும். ஆனால் மேலே சொல்லப்பட்ட சொற்களும் சில இடம் பெற்றுள்ளதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
அடுத்து AutoCorrect Exceptions டயலாக் பாக்ஸை மீண்டும் பார்க்கவும். கீழாக, Automatically Add Words to List என்ற செக் பாக்ஸ் இருப்பதைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுத்தால், AutoCorrect செயல்பாடு, நீங்கள் டைப் செய்கையில் என்ன என்ன தேவைகளை விரும்புகிறீர்கள் என்பதனைக் கண்காணித்து, அவற்றிற்கேற்ப தன் பொருளடக்கத்தினை மாற்றிக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, வேர்ட் தானாக சொல் ஒன்றை மாற்றுகையில், நீங்கள் பேக் ஸ்பேஸ் பயன்படுத்தி, உங்கள் விருப்பப்படியே, சொல்லை அமைத்தால், வேர்ட் அதனை உணர்ந்து, வாக்கியத்தின் இறுதி சொல்லை அதன் நிறுத்தக் குறியுடன் இந்த பட்டியலில் அமைத்துக் கொள்ளும். இப்படித்தான், "you” என்ற சொல் இதில் இடம் பெற்றிருக்கும். வேர்ட் இது போல உங்களைக் கண்காணித்துச் செயல்பட வேண்டாம் என நீங்கள் எண்ணினால், Automatically Add Words to என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.
எண்ணுடன் ஒரு வாக்கியம் முடியும் போது ஏற்படும் பிரச்னை இன்னொரு வகையானதாகும். பழைய வேர்ட் பதிப்புகளில், எண்கள் டைப் செய்து பின்னர் புள்ளி வைத்தால், அடுத்த வாக்கியத்தில், வேர்ட் தானாக முதல் சொல்லின் முதல் எழுத்தினைப் பெரிய எழுத்தாக அமைத்து வந்தது. சில இலக்கணவாதிகள், இதனை சரி இல்லை எனக் குற்றம் சாட்டினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு எண் இறுதியில் இடம் பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்றால், அது எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இதனால், மைக்ரோசாப்ட் அதற்கேற்ற மாற்றத்தைக் கொண்டு வந்தது. எண்களும் தொடர்ந்து புள்ளியும் டைப் செய்தால், அடுத்த சொல் சிறிய எழுத்திலேயே தொடங்கியது.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies