ஜனாதிபதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க நாம் தயார் - அன்னலிங்கம் அன்னராசா
19 Feb,2025
இந்திய ரோலர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் வடக்கிலிருந்து ஜனாதிபதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதற்கு தாம் தயார் என அகில இலங்கை கடற்றொழில் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(18.02.2025) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் இதுவரை தீர்க்கப்படவில்லை.
தற்போது நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதீட்டில் கடற்றொழிலாளர்களுக்கு என எந்தவித ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.
கடற்றொழில் அமைச்சரால் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. எவ்வாறாயினும், கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.