காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் மரணம்,
15 Dec,2024
தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் உள்நாட்டுபோரில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டபோது , சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் தனக்கு மகிழ்ச்சியை தருகின்றது என்று கொண்டாடி மகிழ்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் (75) இன்று உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் நுரையீரல் பாதிப்பால் இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இளங்கோவன் சர்ச்சை கருத்துக்கள்
பெரியாரின் பேரனும், சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 2001 ஆம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றபோது, திமுக, அதிமுக தலைவர்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி பிரபலமடைந்தார்.
அதுமட்டுமல்லாது , இலங்கையின் இறுதிப்போரில் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்ததாகவும், கொண்டாட வேண்டும் என்றும் ஈவிரக்கமின்றி தெரிவித்து இருந்தமை தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.