நாட்டில் சீரற்ற வானிலையால் 12 பேர் பலி : 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
28 Nov,2024
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 77 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த அனர்த்தத்தில் 91 வீடுகள் முழுமையாகவும் 1662 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
நாடளாவிய ரீதியில் 311 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முகாம்களில் 10 ஆயிரத்து 431 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 695 பேர் தங்கவைக்கப்பட்டுள்னளர்.