இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : குறைந்த கட்டணத்துடன் ஆரம்பமான புதிய விமானசேவை
21 Nov,2024
இலங்கை(sri lanka) மற்றும் சிங்கப்பூர்(singapore) இடையே குறைந்த கட்டணத்துன் கூடிய விமானசேவை இன்றுமுதல் (நவ. 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜெட் ஸ்டார் ஏர்லைன்ஸின் முதல் கன்னி விமானமான ஜெட் ஸ்டார் ஏர்லைன்ஸின் விமானம் சிங்கப்பூரில் இருந்து இன்று காலை 10:15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இவ்வாறு வந்த விமானம் நீர் வணக்கத்துடன் உத்தியோகபூர்வமாக வரவேற்றகப்பட்டது.
இந்த முதல் விமானத்திற்கு ஏர்பஸ் ஏ-320 விமானம் பயன்படுத்தப்பட்டது மற்றும் 179 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் வந்துள்ளனர்.
வாரத்தில் 5 நாட்களும் இயக்கப்படும்
இந்த விமானங்கள் வாரத்தில் 5 நாட்களும் இயக்கப்படும் இதன்படி ஞாயிறு, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து, அன்றைய தினம் இரவு 11:30 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்படும்.
மேலும், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு விமான நிலையத்திற்கு வரும் இந்த விமானங்கள் அன்றைய தினம் இரவு 11:30 மணிக்கு சிங்கப்பூர் புறப்படும்.
குறைந்த விமானக்கட்டணம்
இந்த விமான நிறுவனம் இலங்கைக்கு வந்து சிங்கப்பூர் திரும்புவதற்கான விமானக் கட்டணமாக ரூபா 140,000 வசூலிப்பதாக விமான நிலைய மேலாளர் குறிப்பிட்டார்.
இன்று வந்த இந்த விமானத்தில் இருந்து 178 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இன்று இரவு 11:30 மணிக்கு புறப்படவுள்ளனர்.