விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்
                  
                     21 Nov,2024
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
	 
	அந்தவகையில், விசுவமடுவில் உள்ள தேராவில் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
	 
	குறித்த நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று (21.11.2024) பொதுமக்களால் பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி மாவீரர் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
	 
	 
	இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரியபரந்தன் வட்டாரக் கிளையினரின் ஏற்பாட்டில் அந்த வட்டாரத்துக்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
	 
	இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கெளரவித்து உரையாற்றினார்