சுமந்திரனின் தேசியப்பட்டியல் விவகாரம் - புலம்பெயர் தமிழர்கள் விடுத்த கோரிக்கை
                  
                     17 Nov,2024
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளித்து எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) நாடாளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற வேண்டாம் என அமெரிக்க புலம்பெயர் தமிழர்கள் (Tamil Diaspora) வலியுறுத்தியுள்ளார்கள்.
	 
	அமெரிக்க புலம் பெயர் மக்கள் நேற்று (16.11.2024) சுமந்திரனுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	 
	15 வருடகால தலைமைத்துவத்தின் பின்னர் தமிழ் அரசியலில் அவரது பங்கிற்கு இனி ஆதரவு இல்லை என்பதை தமிழ் மக்கள் நவம்பர் 2024 தேர்தலில் தெளிவுபடுத்தியுள்ளனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
	 
	தமிழ் அரசுக் கட்சியின் பிளவு
	குறித்த கடிதத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது கவலைகளை கோடிட்டுக் காட்டியதுடன், தமிழ் மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் அவர் அடையத் தவறியதை எடுத்துக்காட்டியுள்ளனர்.
	 
	சுமந்திரனின் தேசியப்பட்டியல் விவகாரம் - புலம்பெயர் தமிழர்கள் விடுத்த கோரிக்கை | Ma Sumanthiran Should Not Get A National List Seat
	 
	இந்த நிலையில் சுமந்திரனின் தலைமையின் கீழ் ஏற்பட்ட பிளவுகளாக 
	 
	1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) பிளவுபட்டுள்ளது.
	 
	2. தமிழ் அரசுக் கட்சியில் பிளவு.
	 
	3. புலம்பெயர் தமிழர்களின் பிரிவு.
	 
	4. வட மாகாண ஆட்சிக்காலத்தில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களுடன் குழப்பத்தை ஏற்படுத்தியது.
	 
	5. தமிழர்களை விட குறைவான ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாண சபைகளை வழங்குவது தமிழ் சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
	 
	6. யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் பெண்கள் கல்லூரி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனங்களில் பிரிவுகள் தோன்றி எமது சமூகத்தில் பிளவுகளை ஆழப்படுத்தியுள்ளன.