தமிழ்நாட்டின் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து நெடுந்தீவை வந்தடைந்த 9 இலங்கையர்கள்
10 Nov,2024
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒன்பது இலங்கையர்கள் நெடுந்தீவை வந்தடைந்தனர்.
திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரே நெடுந்தீவுக்கு நாட்டுப்படகில் வந்துள்ளனர்.
இவர்கள் தொடர்பில் தகவல் அறிந்த நெடுந்தீவு பொலிஸார், அந்த 9 பேரையும் தனியார் ஒருவரின் வீட்டில் தங்கவைத்துள்ளனர்.
பின்னர், இவர்களுக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.