அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கி பயணிக்கும் போது குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்துகொண்டிருப்பது எமது வேலையல்ல. அதை நாம் விரும்பவதும் கிடையாது. எமது நிலைப்பாட்டின் பெறுபெறே எமக்கு முக்கியம். அதனால் நாம் இவ்வாறானவர்களின் குரைப்புக்ளையும் கனைப்புக்களையும் கண்டுகொள்வது கிடையாது எனவும் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு , யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தேசிய நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்தவதற்காக இம்முறை பல மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தோம்.
குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களுடன் களுத்துறை, ஹம்பகா கொழும்பு, புத்தளம் போன்ற மாவட்டங்களிலும் போட்டியிட முடிவுசெய்திருந்தோம். ஆனால் காலம் போதாமையால் இம்முறை களுத்துறை, ஹம்பகா மாவட்டங்களில் அதை மேற்கொள்ள முடியாதிருந்தபோதிலும் இம்முறை கொழும்பு புத்தளம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் போட்டியிடுகின்றோம்.
நான் அன்று முன்வைத்த மாற்று கொள்கை மாற்று வேலைத்திட்த்தை அன்று சக தமிழ் கட்சிகள் எற்றிருந்தால் கடந்தகால அழிவுகளை சந்தித்திருக்க வெண்டிய நிலை எற்பட்டிருக்காது.
ஆனால் இத்தனையும் நடைபெற்ற பின்னர் தற்போது எனது அந்த நிலைப்பாட்டிற்கு அவர்கள் வந்தள்ளனர்.
மாற்று வேலைத்திட்டத்தை கொள்கையை பின்பற்றியிருந்தால் காலம் கழிந்து அனைத்து தமிழ் கட்சிகளும் நாம் எதை கூறிவந்தோமோ குறிப்பாக அன்றாட பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமை என்ற நிலைப்பாட்டையே முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.
அன்று நாம் சிறுவர்களாக இருந்தபோது “சோறா சதந்தரமா” வேண்டும் என உணர்ச்சிவசப்படுத்தி பிரசாரங்களை முன்வைத்தனர். அன்று எமக்கு சோறு இருந்தமையால் சுதந்திரத்தை கையிலெடுத்து வீதிக்கு இறங்கினோம். இதன் விளைவாக சோறும் இல்லை சுதந்திரமும் இல்லை என்ற நிலை உருவானது.
எமக்கு சோறும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் இன்று நாம் சுய நிர்ணய உரிமையை நடைமுறையில் பெற்றிருக்கலாம் என்றே நான் எண்ணுகின்றேன்.
அன்று நாம் ஆயுதத்தை தூக்கியது சுதந்திரத்தை எட்டமுடியும் என்று ; அது தவறாகிவிட்டது. இன்று அந்த அனுபவங்கள் குறிப்பாக இரண்டு அனுபவங்கள் இருக்கின்றது.
இம்முறை மக்கள் எனக்கு அரசியல் அதிகாரத்தை தந்தால் நிச்சயம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டமுடியும் என நம்புகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.