இலங்கைஅகதிகளை நாடு கடத்துவதில் தீவிரம் காட்டும் பிரித்தானியா
22 Oct,2024
இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக பிரித்தானியா குற்றம் சாட்டி வரும் அதேவேளை, புலம்பெயர் தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு பிரித்தானியா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மீது குற்றச்சாட்டுக்களை சமூகவியலாளர்கள் இன்றளவும் முன்வைக்கின்றனர்.
இது பிரித்தானியாவின் இரட்டைவேட அரசியலை எடுத்துக்காட்டுவதாகவும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அரசியல் அடைக்கலம் கோருவோரின் மனித உரிமைகளை பிரித்தானியா மீறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களையும் ஆபத்திற்குள் தள்ளி விடுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், மனிதவுரிமை மீறல் விவகாரத்தில் இலங்கைக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படுமாக இருந்தால் அது பிரித்தானியா உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்டுத்தும் என பிரித்தானியாவில் உள்ள மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தோல்வியடையுமாக இருந்தால் அது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இது புலம்பெயர் சமூகத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சட்டத்தரணி அருண் கணநாதன் பின்வரும் கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார்...