நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானப் பிரதிநிதியான எரிக் சொல்ஹெய்ம், புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சாதகமான சமிஞ்சை ஒன்றை காட்டியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக அநுரகுமார திசாநாயக்க சிறப்பாக செயற்பட்டு வருவதாக அவர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ளன. நேரத்தை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். இராஜதந்திர விடயத்தை சரியாக புரிந்து கொண்டு செயற்படுகிறார்.
முதலில் இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு, பின்னர் சீனத் தூதுவர், இலங்கைக்கு இந்தியா மிகவும் முக்கியமானது என்று சமிக்ஞை செய்த பின்னர், அடுத்ததாக சீனா வருகிறது.
மேற்குலகம், ரஷ்யா மற்றும் பல இடங்களில் இருந்து தூதர்களை சந்தித்தார். இது இலங்கைக்கு முதலில் வெளியுறவுக் கொள்கையின் தெளிவான சமிக்ஞையாகும்.
சத்தியப்பிரமாணம் செய்த உடனேயே கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களின் ஆசிகளைப் பெற்றார். பின்னர் தமிழ், முஸ்லிம் அரசியல் மற்றும் மத தலைவர்களை சந்தித்தார்.
அனைத்து இன சமூகங்களுக்கும் இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல் வலுவாக உள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் ஏழைகளின் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தேவையான வளங்களை கொண்டு வரக்கூடிய வர்த்தக நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலமே வளமான இலங்கையை உருவாக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே அவர் வர்த்தக சமூகத்தை அணுகியுள்ளார்.
ஊழலற்றவர்களை அரச அதிகாரத்திற்கு கொண்டு வருகிறார். அமைச்சர்களுக்கான சொகுசு கார் கொடுப்பனவைக் குறைப்பதன் மூலம், தலைவர்களுக்கு மிகவும் அடக்கமான வாழ்க்கை முறையை அவர் சமிக்ஞை செய்கிறார்.
இவை எதுவும் இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்காது. அது இடதுசாரித் தலைவரை பற்றிய அனைத்து சந்தேகங்களையும் ராஜதந்திரிகளிடையே அகற்றாது. எனினும் அதுவொரு நல்ல ஆரம்பமாகும்.
எல்லோரும் இப்போது தங்கள் கைகளை விரித்து, அமைதியான, பல்லின, பசுமையான மற்றும் வளமான இலங்கையை உருவாக்க அவருக்கு உதவ வேண்டும்” என அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.