சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் என தமிழ் தேசிய கட்டமைப்பின் ஐனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியடப்பட்டது.
இதன்போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது. அதை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர். சிலர் எரிச்சல் படுகின்றனர். சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். அவ்வாறானவர்களை சிரிப்போடு கடந்து செல்வோம். அவர்களின் பெயர்களை கூறி அவ்வாறானவர்களை பிரபல்யப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தவறுகள் என்பது எல்லோரிடமும் இருக்கின்றது. தவறு இழைத்தவர்கள் அத்தனைபேரும் வருகின்ற 22 ஆம் திகதி தமிழ் மக்கள் அளிக்கும் முடிவைப்பார்த்து திருந்துவார்கள்.
சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும். ஒன்றிணைந்த வட கிழக்கில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வுக்காக பலரும் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அதை நோக்கியதான தமிழ்ப்பொது வேட்பாளர் நிலைப்பாட்டை வெற்றிபெற வைப்பதற்காக தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிப்பவர்களும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களும், புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் உறவுகள் என பலவேறு தரப்பினரும் இரவு பகலாக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
சில கட்சிகள் பொது வேட்பாளரை ஆதாரிக்காவிடில் அது செய்தி அல்ல. சங்கை ஆதரித்தால் அதுதான் செய்தி 21 ஆம் திகதிக்கு இடைபட்ட நாட்களில் பல்வேறு கதைகள் வரும். வதந்திகள் வரும். மக்கள் அவை எதையும் பொருட்படுத்தாது சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தவறிழைப்பவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். முடிவு எவ்வாறு அமையும் என எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
எஞ்சி இருக்கும் 15 நாட்களுக்குள் தவறான முடிவெடுத்தவர்கள் திருந்திவரவேண்டும். தந்தை செல்வநாயகத்தின் கொள்கைக்காக தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்பட்டுவரும் நான் அந்த கொள்கைக்காகவே தமிழ்த் தேசிய பொதுக்கடமைப்பின் அழைப்பை ஏற்று தமிழ்ப் பொதுவேட்பாளராக இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றேன். இதனை உணர்ந்துகொண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழர் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது. அதை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர். சிலர் எரிச்சல் படுகின்றனர். சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். அவ்வாறானவர்களை சிரிப்போடு கடந்து செல்வோம்.
சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும்; தமிழர்களிடம் அழைப்பு விடுத்திருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி
தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன், தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே வருகிறார்கள். தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை.
இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம்.
நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்து விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.
வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது எமது வரலாற்றுக் கடமை.
கடந்த காலங்களில் கூட்டணியின் தலைமை பல துரோகங்களுக்குத் துணைபோய் இருக்கிறது என்பது. ஆனால், இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை தமிழ் இனத்தின் வரலாற்றுக் கடமையைச் செய்யத் தயங்காது என்றுள்ளது.
https://thinakkural.lk/article/309013
ஏராளன்
ஏராளன்Grand Master
கருத்துக்கள உறவுகள்
22.5k
Gender:Male
Location:யாழ்
Interests:வாசிப்பு
தொடங்கியவர்
கருத்துக்கள உறவுகள்
Posted வியாழன் at 08:17
தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது- அரியநேந்திரன் கூறுகிறார்
தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது எனவும் எங்களுடைய மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் எனவும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளரில் நீங்கள் அளிக்கும் வாக்கும் சிந்திக்க வைத்துள்ளது. இப்பொழுது சிந்திக்க வைத்துள்ளார்கள். தென்பகுதியில் அவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு 24 மாவட்டங்கள் இருக்கின்றது. ஆனால் நாங்கள் வடக்கு கிழக்கிலே 8 மாவட்டங்களில் மட்டும் தான் பிரச்சாரப்பணியை மேற்கொள்கிறோம்.
ஆனால் அவர்கள் இங்கே வந்து முகாமிட்டு யாழ்பாணமாக இருக்கலாம், மட்டக்களப்பாக இருக்கலாம், திருகோணமலையாக இருக்கலாம், தாங்களும் வருகின்றார்கள் தங்கள் மனைவிகளை அனுப்புகின்றார்கள், பிள்ளைகளை அனுப்புகின்றார்கள், அவ்வாறு அனுப்பி எங்கள் வாக்கை சிதரடிப்பார்களேயானால் தமிழ் மக்கள் என்ன சிந்திக்க தெரியாதவர்களா? அல்லது வட கிழக்கு மக்கள் அவர்களது கோரிக்கையை நம்புவதற்கு எங்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மையாக இருக்கிறது.அவர்கள் முகவர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
முகவர்களாக செயற்படுகின்றவர்கள் ஒன்றை உணர வேண்டும். தமிழ் மக்களுக்கான நீண்ட கால தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது இந்தமுறை ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த செய்தியை சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு எடுத்த முயற்சியை இவர்கள் சிதைக்கின்றார்கள்.
நான் 8 மாவட்டத்திலும் பிரச்சார பபணிகளை மேற்கொண்டுள்ளேன் . 8 மாவட்ட மக்களும் தெளிவாக இருக்கின்றார்கள். இந்த முறை நாங்கள் எல்லோருமே சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது- அரியநேந்திரன் கூறுகிறார்
ஆகவே தமிழர் வாக்குகளை சிதறாமல் ஒன்றாக கட்டிஸஸஸ.
அரியத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இரண்டு விடயத்தை கையாளலாம்..
1. புலிகளை முடித்துவிட்டு இதோ தீர்வு தருகிறோம் என்ற ஹிந்தியாவிற்கும்.. மேற்குலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. உங்கள் வாக்குறுதிக்கு என்னானது.. நாம் தமிழ் மக்கள் இன்னும் சுயநிர்ணய உரிமைக்கான தேவையோடு.. தமிழ் தேசிய இனமாக ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை சொல்லலாம்.
2. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரசியல் போட்டா போட்டிக்குள் சிங்களவர்கள் தமக்கான அரசின் ஆட்சித் தலைமையை தெரிவு செய்வதில் இருந்து தமிழ் மக்கள் விலகி நிற்கலாம். இது உலகிற்கு இன்னொரு செய்தியை சொல்லும்.. இலங்கையில்.. இரு வேறு தேசிய இனங்கள்.. இரு வேறு கொள்கைகளுடன் அரசியல் தேவைகளுடன் உள்ளன என்பதை. அதனை சர்வதேசம் தேசிய நல்லிணக்கம்.. அது இதென்று போலி வார்த்தைகளால் மூடி மொழுகி விட முடியாது. தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் தீர்வை பெற்றுத்தருவதில் கருசணை கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லலாம்.
சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் கீழ்... அரியத்தை இறக்கியது தேவை இல்லாத ஆணி ஆக தோன்றினாலும்.. அதனை தேவையாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம்.
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது.
நானும் விசாரித்ததில் இது உண்மையென்றே சொல்கிறார்கள்.
ஒருவரைத் தன்னும் இப்படி வாக்கு போடுங்கோ என்று இதுவரை சொன்னதில்லை.
ஏராளன் உங்களுக்கு நிலமைகள் ஓரளவு விளங்கியிருக்கும்.
உண்மை நிலவரத்தை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே?
:
அரியத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இரண்டு விடயத்தை கையாளலாம்..
1. புலிகளை முடித்துவிட்டு இதோ தீர்வு தருகிறோம் என்ற ஹிந்தியாவிற்கும்.. மேற்குலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. உங்கள் வாக்குறுதிக்கு என்னானது.. நாம் தமிழ் மக்கள் இன்னும் சுயநிர்ணய உரிமைக்கான தேவையோடு.. தமிழ் தேசிய இனமாக ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை சொல்லலாம்.
2. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரசியல் போட்டா போட்டிக்குள் சிங்களவர்கள் தமக்கான அரசின் ஆட்சித் தலைமையை தெரிவு செய்வதில் இருந்து தமிழ் மக்கள் விலகி நிற்கலாம். இது உலகிற்கு இன்னொரு செய்தியை சொல்லும்.. இலங்கையில்.. இரு வேறு தேசிய இனங்கள்.. இரு வேறு கொள்கைகளுடன் அரசியல் தேவைகளுடன் உள்ளன என்பதை. அதனை சர்வதேசம் தேசிய நல்லிணக்கம்.. அது இதென்று போலி வார்த்தைகளால் மூடி மொழுகி விட முடியாது. தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் தீர்வை பெற்றுத்தருவதில் கருசணை கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லலாம்.
சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் கீழ்... அரியத்தை இறக்கியது தேவை இல்லாத ஆணி ஆக தோன்றினாலும்.. அதனை தேவையாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம்.
நானும் விசாரித்ததில் இது உண்மையென்றே சொல்கிறார்கள்.
ஒருவரைத் தன்னும் இப்படி வாக்கு போடுங்கோ என்று இதுவரை சொன்னதில்லை.
ஏராளன் உங்களுக்கு நிலமைகள் ஓரளவு விளங்கியிருக்கும்.
உண்மை நிலவரத்தை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே?
என்னுடைய பெற்றோர் பொதுவேட்பாளருக்கு போடுவதாக இருக்கிறார்கள். ஏனைய நண்பர்களிடம் விசாரித்து சொல்கிறேன் அண்ணை.
ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது.
மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம். ஆனால் சிலர் சங்கு சின்னத்துக்கு வாக்களித்த பின்னர் விரும்பிய மற்றைய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறு கின்றனர். இது எனதோ, பொது கட்டமைப்பை சார்ந்தவர்களுடைய கருத்தோ இல்லை.
தற்போதைய நிலவரப்படி எவருமே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
நல்லூர் திருவிழாவிற்கு காப்புக்கடை போடுவது போன்று, கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இனிப்பு கடை போடுவது போன்று, வடக்கு கிழக்கில் வந்து தங்கி பிரச்சாரம் செய்கின்றனர்.
அவர்களுக்கு முகவர்களாக சில தமிழர்கள் செயற்படுகின்றனர். எமது இனத்திற்காக அவர்கள் சிந்தித்து சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்க முன் வரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற உபாயம், தமிழ் தேசிய மக்களை ஒன்று திரட்ட பயன்படப்போகும் ஒரு அடையாளம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல ஒரு வாய்ப்பாக கொள்ளவேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்கள்.
உண்மையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம், தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒரு புள்ளியில் நின்று, மக்களிடம் சென்று ஆதரவு திரட்டிவதென்பது மிக நல்ல விடயம். மிக மிக நல்ல விடயம். தமிழ் தேசிய அரசியலில் ஒரு தீர்மானமிக்க புள்ளி!
இதன் மூலம் இத் தேர்தல் முடிவில், நீண்டகாலமாக தமிழ் மக்களுடம் கோரிக்கை அளவில் மட்டும் இழுபட்டு வந்த பல விடயங்களுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி போட்டுவிடமுடியும்.
1. வடக்கில் (யாழ்/வன்னி) மட்டும் ஓரளவு வாக்குகளைப் பெற்று- கிழக்கில் பெருத்த அடி வாங்குவதன் மூலம், வடக்கு கிழக்கு இணைப்பென்பது வெறும் மடையர்களின் கோரிக்கை மட்டுமே- கிழக்கு தமிழ் மக்கள் ஆணை கிடைக்காத அதை மொத்தமாக இனி உதாசீனப்படுத்திவிடலாம் என்கின்ற செய்தியையும்,
2. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகளில் 50% வீதத்தையேனும் பெறாத தமிழ் தேசிய வேட்பாளர் என்பது- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து- தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரித்து, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்கின்ற செய்தியையும்,
3. தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பெரும்பான்மை தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்வதுபோல் உண்மையில் பிரச்சனைகள் இல்லை- அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசியத்தினை அரசியல் -பொருளாதார லாப நோக்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற செய்தியையும்,
4. பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்த தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை நாங்களும் நிராகரிப்பதே சரி- இவர்களுக்கு தீர்வென்பது இனி தேவையே இல்லாத ஒன்று என்கின்ற செய்தியை சிங்களத்துக்கும் உலகிற்கும்
சொல்லத் துணிந்து, தமிழ் மக்களின் இத்தனைகால உரிமைப் போராட்டத்தை முட்டாள்தனமான சுயலாப அரசியல் முடிவினால் விற்கத் துணிந்திருக்கும் ஶ்ரீதரன்- மாவை- செல்வம்- விக்கி- சித்தார்த்தன்- சுரேஷ் போன்ற தமிழ்தேசியத் தூண்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!
தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில்,
மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்!
செய்வீர்களா?