‘ஈழு’ என்னும் மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம்,

12 Aug,2024
 

 
 பெயர்
 
இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தை சேர்ந்த வர்த்தக பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இவர் தாம் பயணித்த பாதையில் வட இலங்கை, தென் இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தார். மேலும் பல சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் பரவிக் கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
அந்தமானில் இருந்து புறப்பட்டு, ஜைலன் (சிலோன்-இலங்கை) / SEILAN] என்ற இலங்கை தீவின் வட பகுதியை அடைந்தான்.
 
அங்கு தமிழ் அரசன் செண்டெமைன் [SENDEMAIN / probably a corruption of the Tamil word ‘Sandamann’ or யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சந்திரபானுவின் மகன் சாவகன்மைந்தன்] அரசாட்சி செய்தான். அங்குள்ள மக்கள் சிலைகளை வணங்கினர். அது எந்த ஒரு நாட்டையும் சாராத சுதந்திர நாடு.
 
ஆடவரும் பெண்டீரும் ஒரே ஒரு துணியை உடலில் சுற்றி இருப்பார்கள். அரிசி மற்றும் எள்ளு அங்கு விளைகின்றன பால், அரிசி, இறைச்சி இவர்களின் உணவு. எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். [பனை] மரங்களில் இருந்து கள்ளு எடுக்கிறார்கள் என்கிறார்.
 
இவைகள் எல்லாம் தமிழும் தமிழரும், சைவமும் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்ததை எடுத்து காட்டுகின்றன.
 
குறைந்தது பதினெட்டிற்கு மேற்படட பயணிகள், உதாரணமாக ஒரு ரோமன், ஒரு கிரேக்கம், இரண்டு சீனர்கள், நான்கு இத்தாலியர்கள். ஒரு வடமேற்கு மொராக்கோவில் உள்ள ஒரு நகரமான டன்கிரில் வசித்த சோனகர், ஒரு போர்த்துகீசிய சிப்பாய்-வரலாற்றாசிரியர், இரண்டு டச்சுக்காரர்கள், ஒரு ஜெர்மன், ஒரு பிரஞ்சு கோமகன், ஒரு டச்சு கடற் படை அதிகாரி, ஐந்து பிரித்தானியர்கள் 
 ரோமன் காலத்தில் இருந்து பிரிட்டிஷ் காலம் வரை இலங்கைக்கு வந்து, இலங்கையைப் பற்றி தமது குறிப்புகளில் எழுதியுள்ளார்கள். அவர்களில் சிலரை நாம் இங்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.
 
முதலாவது கண்டியின் அதிகாரி, பிலிமத்தலாவ
பிரிட்டிஷ் காலனி அரசின் பிடியில் இருந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்குக்கு, தனது விசுவாசமான குடிமக்களுடன் தப்பி ஓடினார்.
 
அவரை அவர்கள் பல்லக்கில் அனுராதபுரத்தின் ஊடாக வன்னிக்கு காவிச் சென்றனர். அவர் மிகவும் சோர்வுற்று களைத்துப்போய் இருந்தார். என்றாலும் எல்லாளனின் நினைவு தூபி வந்ததும், பல்லக்கில் இருந்து இறங்கி, நீண்ட தூரம் நடந்து போனார்
 
 
அவரின் விசுவாசமான குடிமக்கள், நினைவு தூபியை கடந்து நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்று சொல்லியும், இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தே, பல்லக்கில் ஏறினார் என்பது வரலாறு.
 
அந்த பெருமைமிக்க தமிழ் அரசன் தான் எல்லாளன்! நான் இந்த நேரத்தில், இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும். தீபவம்சம், விகாரமகாதேவியின் எந்த கோரமான ஆசைகளையும் [the gory desires of Vihara Mahadevi] சொல்லவில்லை, ஆக மகாவம்சமும் அதன் பின் எழுதப்பட்ட காப்பியங்களும் தான் சொல்லுகின்றன.
 
இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும்,ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை / வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை.
 
எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப் பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந் தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள். 
 
 
மேல் கூறப்பட்ட பயணிகளின் குறிப்புகளுடனும், புத்தரின் மூன்று இலங்கை வருகையை சித்தரிக்கும் கதைகளுடனும், இதையும் [மேலே கூறியவற்றையும்] நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன்.
 
முதலியார் செ இராசநாயகம் ‘எலு’ என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் ‘ஈழு’ என்னும் நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம், ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார்.
 
உதாரணமாக, பட்டினப் பாலை “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் ” என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் ‘ஈழ’ என்றும் இரண்டாவது சாசனம் ‘ஈலா’ என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies