ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை காலால் மிதித்தவரை யாழ் பொலிஸார் விசாரனைக்கு அழைப்பு!!-
23 Jun,2024
ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை கீழே போட்டு காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனை சனிக்கிழமை (22) அன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸாரால் , வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
தியாகி அறக்கொடை நிறுவன தலைவரின் மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனது அறக்கட்டளை அலுவலகத்திற்கு முன்பாக வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார்
அதன் போது, நிவாரணம் பெறுவதற்கு தான் எதிர்பார்த்த மக்கள் வரவில்லை என கூறி , தனது சட்டை பையில் இருந்த பெருமளவான 5000 ரூபாய் தாள்களை எடுத்து காலால் மிதித்த படி நின்று கருத்து தெரிவித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதையடுத்து பெருமளவானோர் அதற்கு கடும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , தியாகேந்திரனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் வாக்குமூலத்தினை பெற்றுள்ளனர் .
மேலும் , அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.