ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்
05 Jun,2024
ரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் புதன்கிழமை (5) அதிகாலை தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (4) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று, மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகு மூலம் புறப்பட்டு, இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை அடைந்துள்ளனர்.
தாய், தந்தை, நான்கு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கை தமிழர்களான இந்த ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.