முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
03 Jun,2024
முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முன் தினம் (01) முள்ளியவளையில் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு அமைப்புகளாக இயங்கி வருகின்ற முன்னாள் போராளிகள் அமைப்புகளை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் அமைப்புகள் சாராத முன்னாள் போராளிகள் என சுமார் 200 போராளிகள் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நாட்டில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கி வருகின்ற சவால்கள் தொடர்பாகவும் அது தொடர்பில் எவ்வாறு தாங்கள் பணியாற்ற முடியும் என்பது பற்றியும் அவர்களுக்கு தாங்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள் தேவைப்பாடுகள் தொடர்பிலும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் போராளிகளின் நலன்கள் சார்ந்து அனைவரும் ஒற்றுமையாக பயணிக்கும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்தது.
மதத் தலைவர்கள் ஆசியுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சி போராளிகள் மாவீரர் போராளிகள், குடும்ப நலன் காப்பகத்தின் போராளிகள், போராளிகள், நலனபுரிச் சங்க போராளிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த போராளிகளும் அமைப்புகள் சாராத போராளிகள் என பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.