கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது . அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். அவ்வாறே யாழிலும் இது அரங்கேறியது.
இனப்படுகொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது .ஏன் என்றால் லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். அவ்வாறே யாழ் நூலக எரிப்புக்கு முன்னின்ற இலங்கை அரசின் அரசியல்வாதியும் அல்லது அரசியல்வாதிகளும் ஆகும்.
அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா.இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற ,மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? . அவ்வாறே
நான்சி முர்ரே, ஒரு மேற்கத்திய எழுத்தாளர், "சீருடை அணிந்த காவலர்களும் சாதாரண உடையில் இருந்த குண்டர்களும் சில ஒழுங்கமைக்கப்பட்ட அழிவுச் செயல்களை மேற்கொண்டனர்" என்று எழுதினார்.
"யாழ்ப்பாணம் பொது நூலகம் உட்பட, அதன் 95,000 தொகுதிகள் மற்றும் விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அவர்கள் தரையில் எரித்தனர் ...
இது பற்றி தேசிய செய்தித்தாள்களில் எதுவும் இல்லை, தமிழர்களின் கலாச்சார அடையாளமான நூலகத்தை எரித்தது கூட இல்லை.
ஜூன் 2 ஆம் தேதி வரை அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவருவதை அரசாங்கம் தாமதப்படுத்தியது, அந்த நேரத்தில் முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன."
எரிப்பு இரண்டு இரவுகள் தடையின்றி தொடர்ந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையகம் மற்றும் ஈழநாடு நாளிதழின் அலுவலகங்கள் உட்பட யாழ்ப்பாண நகர் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளும் கும்பலால் தீவைக்கப்பட்டன.
வர்ஜீனியா லியரி, சர்வதேச நீதிபதிகள் ஆணையம் சார்பில் ஜூலை/ஆகஸ்ட் 1981 இல்
"யாழ்ப்பாண பொது நூலகத்தை அழித்த சம்பவம் யாழ் மக்களுக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும்." என்று கூறினார்.
இனங்களுக்கிடையிலான நீதி மற்றும் சமத்துவத்திற்கான இயக்கம் ஒரு தூதுக்குழுவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய பின்னர் அறிக்கை ஒன்றில்
"யாழ்ப்பாண மக்களுக்கு எந்த அழிவுச் செயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று கேட்டால், யாழ்ப்பாண மக்களின் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் மீதான, இந்த யாழ் பொது நூலகத்தின் மீதான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகத் தான் இருக்கும். இந்த நூலகத்தின், அறிவின், பண்பாட்டின் சின்னத்தின் அழிவு பல ஆண்டுகளுக்கு கசப்பான நினைவுகளை விட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியது.