இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு ஐக்கிய அமெரிக்காவிலும் பொருளாதாரத் தடை
30 May,2024
அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை ஐக்கிய அமெரிக்காவிலும் (US) நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஐக்கிய அமெரிக்க தொழிற்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அமெரிக்க தொழிற்கட்சியின் மூத்த பிரமுகர்கள் இந்த மாதம் நாடாளுமன்றில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை குறிக்கும் நிகழ்வில் வைத்து உரையாற்றியபோதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த நிகழ்வின் போது, பிரித்தானிய தமிழர்களுக்கான உறுதிமொழிகளை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளதுடன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழினப்படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் போன்ற நிகழ்வுகள், இலங்கையின் இன்றைய அரசாங்கத்திற்கும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வரப்போகும் அரசாங்கத்திற்கும் இனப்படுகொலைகள் தொடர்பில் நினைவூட்டல்களை வழங்குகின்றன என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, தொழிலாளர் கட்சி என்ற வகையில் எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்த மக்கள் படுகொலைகள் முறையாக திட்டமிடப்பட்டவை எனவும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றிய அப்பட்டமான ஆதாரங்களை உலகத்தின் கவனத்திற்கு தமிழ் சமூகம் துணிச்சலுடன் கொண்டு வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, போர் குற்றங்களைச் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையரின் பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச வர்த்தகத்திற்கான நிழல் அமைச்சர் கரேத் தோமஸ் (Gareth Thomas), ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக சர்வதேச மேக்னிட்ஸ்கி (Magnitsky)தடைகள் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்பது கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாதது என கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.