தன் இலக்கு போராட்டம் மூலமாகவே முன்னெடுக்க வேண்டும்: சிறீதரன் ஆணித்தரம்
                  
                     28 May,2024
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ( S. Shritharan) தெரிவித்துள்ளார்.
	 
	கிளிநொச்சியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், “தமிழர்களுக்கு என ஒரு தனித்துவமான இனம், அவர்களுக்கே உரித்தான மொழி, வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
	 
	அத்துடன், அரசு இங்குள்ள படைகள் மூலம், சிங்கள அடையாளங்களையும் சிங்கள பண்பாட்டு முறைகளையும் தமிழர் பிரதேசத்திற்குள் திணிக்க முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
	 
	மேலும், இனத்திற்கு இதுவும் ஒரு சாபக்கேடு என தெரிவித்த சிறீதரன், நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
	 
	இலக்கு நோக்கிய பயணத்தை போராட்டம் மூலமாகவே முன்னெடுக்க வேண்டும்: சிறீதரன் ஆணித்தரம் 
	 
	நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலமே முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.