முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் , தமிழர்களுக்காக குரல் கொடுத்த அமெரிக்க செனட்டர்
19 May,2024
கைது அச்சமின்றி தமிழர்கள் இனப்படுகொலையின் 15 ஆண்டுகளை நினைவுகூர அனுமதிக்க வேண்டுமென்று மேரிலாந்திற்கான அமெரிக்க செனட்டர் பென் கார்டின் (Ben Cardin) இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தகவலை, அவர் நேற்று (18) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலானது நேற்றைய தினம் (18) இலங்கையின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த நினைவேந்தல்களின் போது சில இடங்களில் காவல்துறையினர் அடாவடித்தனமாக நடந்துக்கொண்டனர்.
இதனடிப்படையில், இதனை மையப்படுத்தியே அமெரிக்க செனட்டரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.
மேலும், நேற்றைய தினம் (18) மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நினைவேந்தலின் போது அங்கிருந்த மாணவர்களை காவல்துறையினர் மிரட்டி அராஜகத்தை அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.