கனடா செல்ல முற்பட்ட யாழைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
12 May,2024
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (11) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்களுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கிய யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை அண்மைக்காலமாக போலி கடவுச்சீட்டு விவகாரங்கள் நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் போலி கடவுச்சீட்டு முகவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்பாடு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.