புலம்பெயர் கனேடிய விண்ணப்பதாரர்களின் நிதி ஆதாரம் தொடர்பில் அந்நாட்டின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது(IRCC) புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி கனடாவுக்கான எக்ஸ்பிரஸ் நுழைவு வீசா விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே 27. 2024ஆம் திகதிக்கு முன்னர் புதிய நிதிச் சான்றுடன் தங்கள் சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவுக்கான(Canada) எக்ஸ்பிரஸ் நுழைவு வீசா விண்ணப்பதாரர்களுக்கான புதிய நிதி திட்டத்தை மே 28, 2024 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக கனடா அறிவித்துள்ளது.
இதன்படி கனடா தமது புலம்பெயர் நிதி திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.
இதற்கமைய விண்ணப்பதாரர், அவர்களது மனைவி அல்லது பொதுச் சட்டப் பங்குதாரர், அவர்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் மனைவி அல்லது பங்குதாரரைச் சார்ந்திருக்கும் குழந்தைகளும் உள்ளடக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு விண்ணப்பதாரருக்கு, தேவையான தொகை 14,690 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 13,757கனேடிய டொலர்கள்) எனவும்,
இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு, 18,288 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 17,127கனேடிய டொலர்கள்) எனவும்,
மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு, புதிய தொகை 22,483 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 21,055 கனேடிய டொலர்கள்) எனவும்,
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, 27,297 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 25,564 கனேடிய டொலர்கள்) எனவும்,
ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, 30,690 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 28,994 கனேடிய டொலர்கள்) எனவும்,
ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு, 34,917 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 32,700 கனேடிய டொலர்கள்) எனவும்,
ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கு, புதிய தொகை 38,875 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 36,407 கனேடிய டொலர்கள்) எனவும்,
ஏழு உறுப்பினர்களுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கும் 3,958 கனேடிய டொலர்கள் (முன்னைய தொகை 3,706 கனேடிய டொலர்கள்) என புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பால், ஏற்றுக்கொள்ளக்கூடிய நிதி ஆதாரம் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்கள் மூலம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.