இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் உரியதா? பேருந்தில் எழுதப்பட்ட வாசகத்தால் !
02 May,2024
”இலங்கை சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது” என்ற இந்த வாசகம், சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆடம்பர பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததை பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் முகநூலில் வெளியிட்ட கருத்து,
கடந்த வியாழக்கிழமை காலை 7 மணியளவில் கொழும்பு பொரள்ளை பேஸ்லைன் வீதியால் இப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த வாசகத்தை அவர் கையடக்கத் தொலைபேசியின் கமராவில் புகைப்படம் எடுத்துள்ளார்.
அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த வாசகம் எழுதப்பட்டிருந்த இப் பேருந்து என் கண்ணில் தென்பட்டது.
சிங்கள அரசியல்வாதிகள் தமது தேவைக்காக இனவாதம் பேசுவதைச் சிலவேளை நிறுத்தக்கூடும்.
ஆனால் சிங்கள உயர் அதிகாரிகள், முதலாளிகள், வியாபாரிகள் என்று அனைத்து மட்டங்களிலும் இப்போது இனவாதம் ஒரு ”சிங்களப் பண்பாடாக” மாறி வருகின்றமை கண்கூடு.
குறிப்பாக 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கொழும்பில் உள்ள பல தனியார் நிறுவனங்களில் இனவாதம் தலைதூக்கி வருகின்றது.
தமிழர்களின் முதலீட்டில் இயங்கும் சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சிங்கள உயர் அதிகாரிகள் கூட இனவாதத்துக்குச் சளைத்தவர்கள் அல்ல என குறித்த பத்திரிக்கையாளர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.