பிரான்ஸில் தாயகம் வந்த இளைஞனுக்கு மணமகள் கொடுத்த அதிர்ச்சி!
20 Mar,2024
பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு பிரான்ஸ் வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வேறொருவருடன் மாயமான யுவதி
கடந்த பெப்ரவரி மாத தொடக்கப் பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட பிரான்சில் வசிக்கும் 36 வயதான இளைஞன் கிளிநொச்சி செ
இளைஞனின் பெற்றோர் யுத்ததில் இறந்துவிட்டார்கள். தனது மூத்த சகோதரிகளுடன் வாழ்ந்து வந்த இளைஞன் 2010ம் ஆண்டளவில் பிரான்ஸ் சென்றுள்ளார்.
இந்நிலையில் இளைஞனுக்கு மூத்த சகோதரி பெண் பார்க்கும் படலத்த தொடங்கியுள்ளார். இந் நிலையில் தனது கணவனின் துாரத்து உறவுக்கார குடும்பம் ஒன்றில் 24 வயதான யுவுதி ஒருவரை இ பெண் பார்த்து திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் இளைஞன் யுவதியுடன் தொடர்ச்சியாக கதைத்து வந்துள்ளார்.
அத்துடன் பணம் மற்றும் பரிசுப் பொருட்களும் தொடர்ச்சியாக தனது வருங்கால மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் திருமணம் நடக்க ஆயுத்தமாகியுள்ளது.
பிரான்சிலிருந்து இளைஞன் தை மாத நடுப்பகுதியிலேயே இலங்கை சென்றுள்ளார். அவர் தாயகம் திரும்பிய ஓரிரு நாட்களில் யுவதி வீட்டிலிருந்து காணாமல் போனதால் மணமகன் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளது.
அதன் பின்னரே குறித்த யுவதி, தான் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும் அவருடனேயே தற்போது தங்கியுள்ளதாகவும் தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது பெற்றோருக்கு தொலைபேசியில் கூறிய நிலையில் விரக்தியடைந்த மணமகன் பிரான்ஸ் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகின்றது.