கச்சதீவில் ஆரம்பமானது பெருவிழா :தமிழக மீனவர்களால் வருகை தராத இந்திய பக்தர்கள்
23 Feb,2024
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் நற்கருணை பெருவிழா இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நற்கருணைப் பெருவிழாவில் இலங்கையை சேர்ந்த பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சிலுவைப்பாடுகளை சுமக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மக்கள் என பெருமளவானோர்
இதன்போது கச்சதீவு பங்குத் தந்தை மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் தீவகத்தைச் சேர்ந்த பங்குத்தந்தைகள் இலங்கை மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை காலை திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சிறைவைக்கப்பட்டதை எதிர்த்து தமிழக மீனவர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருவதுடன் இம்முறை கச்சதீவு திருவிழாவையும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.