சாந்தனின் இலங்கை வருகை, அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு
17 Feb,2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது திருச்சி சிறைமுகாமில் உள்ள சாந்தன் இலங்கைக்கு எந்தவேளையிலும் வரலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினாவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாந்தனுடைய தாயார்
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் நிலைமை உள்ளது. சாந்தனுடைய தாயார், சகோதரி, சகோதரன் உள்ளிட்டோர் என்னிடம் வந்து கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர். சாந்தனும் தன்னுடைய வழக்கறிஞருக்கூடாக ஒரு கோரிக்கையை எனக்கு எழுத்தில் அனுப்பியுள்ளார்.
இவற்றை வைத்து அமைச்சரவையில் இது தொடர்பில் பேசியிருந்தேன். அதற்குஅதிபர் ரணில், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டோர் அவர் இங்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளோம். அங்கு அதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கிறது. அவரை அவரது உறவினர்கள் எந்த நேரத்திலும் அழைத்து வரலாம் என தெரிவித்தார்.