சாந்தனின் இலங்கை வருகை தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட கருத்து ,
31 Jan,2024
இந்திய தூதரகத்தால் ஆவணங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரி தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியுடன் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
.
சாந்தனை இலங்கை திரும்பி வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைத் தூதரான வெங்கட் அவர்களோடு பேசப்பட்டுள்ளதாகவும் அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த விடயம் சரிவரும் அத்தோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்தில் அந்த விடயம் சாத்தியமாகும் என தெரிவித்தார்
மேலும் சென்னையில் உள்ள தூதரகத்தின் துணை தூதுவருடனும் நான் தொலைபேசியில் பேசினேன் பாதுகாப்பு அமைச்சினுடைய சில உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதாகவும் உறுதிபடுத்தல் கிடைத்தவுடன் சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.