தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளராக குகதாசன் தேர்வு

27 Jan,2024
 

 
 
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 
பொதுச் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் சகப் வேட்பாளராக சிறிநேசனுக்கு ஆதரவாக 104 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பை சேர்ந்த எட்டுப் பேர் குகதாசனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எட்டு இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாக தெரிவு கூட்டத்தில் குழப்பம்
 
இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக இன்று (27) மத்திய குழு கூடி கலந்தாலோசித்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினரை தெரிவுசெய்தது.
 
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பின்னர் கூடிய பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது. அப்போது, கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு தொடர்பான மத்திய குழுவின் தீர்மானத்தை ஏற்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த 21ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து, ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று (27) திருகோணமலை-முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது.
 
அந்த வகையில் தெரிவுகளுக்காக பொதுச்சபையை கூட்டுவதற்கு முன்னதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆலோசித்திருந்தது.
 
மத்தியகுழுவின் ஆலோசனைக்கமைய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் குகதாசன், சிரேஷ்ட உபதலைவராக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இணை பொருளாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கனகசபாபதி, துணைத் தலைவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், இணை செயலாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் என 13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
 
அதன் பின்னர் பொதுச்சபையைக் கூட்டி மத்திய குழு எடுத்த தீர்மானங்கள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது.
 
இருப்பினும் பொதுச்சபையில் அங்கம் வகிக்கின்ற சில உறுப்பினர்கள் மத்திய செயற்குழுவின் இந்த முடிவை ஏற்க மறுத்ததுடன், பொதுச்சபையில் வாக்கெடுப்பை நடாத்தி பதவிகளுக்கான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் நிர்வாகத் தெரிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலதிக வாக்குகளால் அவர் வெற்றிபெற்றுள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies