இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்
25 Jan,2024
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி இன்று காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி (47) சற்றுமுன் காலமாகி இருக்கிறார். கடந்த ஐந்து மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார் பவதாரிணி. இந்த நிலையில், அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இலங்கையில் தற்போது அவர் காலமாகி இருக்கிறார். பவதாரணி உடல் நாளை மாலை சென்னை கொண்டு வர இருக்கிறார்கள். இவரது கணவர் சபரிராஜ். இந்த ஜோடிக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசையில் ஆர்வம் கொண்ட பவதாரணி கடந்த 2000 ம் ஆண்டு 'பாரதி' படத்தில் வெளியான மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி தேசிய விருது பெற்றார். இந்த பாடல் மட்டும் இல்லாது ஒளியிலே தெரிவது, என்னை தாலாட்ட வருவாளா, தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பாடல்கள் மட்டுமல்லாது 'வெள்ளச்சி', 'மாயநதி' போன்ற பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் பவதாரணி.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பவதாரணி மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். வருகின்ற சனிக்கிழமை மாலை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடக்கிறது என்பதால் அவரும் இலங்கையில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.