நாகபட்டினம் :காங்கேசன்துறை கப்பல்சேவை,வெளியான மகிழ்ச்சி தகவல்
19 Jan,2024
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதுவரை சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், குடிவரவு அதிகாரிகள் ஏற்கனவே காங்கேசன் துறைமுகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
40 வருட இடைவெளிக்குப் பின்னர்
எவ்வாறாயினும், 40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான படகு சேவையின் உத்தியோகபூர்வ தொடக்கம் ஒக்டோபர் 2023 அன்று நடைபெற்றது.
‘செரியபாணி’ என்பது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஒஃப் இந்தியா (எஸ்சிஐ) க்கு சொந்தமான அதிவேகக் கப்பலாகும், இது 35 மீட்டர் நீளமும், 9.6 மீட்டர் பீம் அளவும், 150 பயணிகள் தங்கும் திறன் கொண்டது.
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கான பயணம் ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் ஆகும், ஒரு வழி பயணத்திற்கு இலங்கை ரூபாய் 26,750 மற்றும் இருவழி பயணத்திற்கு 53,500.என அறிவிக்கப்பட்டுள்ளது.