விடுதலைப் புலிகளின் தலைவருக்கு கேக் வெட்டிய பெண்ணுக்கு விடுதலை!
18 Jan,2024
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த நாளை கேக் வெட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட பெண் இன்றையதினம் (18.01.2024) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் கடந்த ஆண்டு (2023) மாவீரர் தினத்திற்கு முதல் நாள் விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயர் பொறித்த கேக்கை வெட்டிய காரணத்திற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், கடந்த இரண்டு மாதங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ஊடாக இன்று விடுதலையாகியுள்ளார்.