நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு: அதிக தொற்றாளர்கள் பதிவான மாதம்
30 Dec,2023
2024 டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது 2023 இல் பதிவான மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 87,078 ஆக உயர்த்தியுள்ளது. இதன்படி, இந்த மாதத்தில் மாத்திரம் 10,600 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வருடத்தின் மொத்த தொற்றாளிகளான 87,078 டெங்கு நோயாளர்களில் 39,543 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 18,401 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 16,020 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் மொத்தம் 5,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பலர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சலால், பல்கலைக்கழக மாணவர் மற்றும் 11 மாத கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டில் மொத்தம் 62 சுகாதார மருத்துவர்களின் பகுதிகள் 'அதிக ஆபத்து' மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.