அறையொன்றில் இருந்து தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்பு
28 Dec,2023
இரத்தினபுரி அலபத கெஹலோவிதிகம பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்ட லயன் அறையொன்றில் இருந்து தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்த பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், 21 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் 02 வயதுடைய சிறுவனொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவரது கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், மரணம் குறித்து நீதவான் விசாரணை நடத்தியதோடு, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் அலபத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.