நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டது
அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுப்பது பற்றி கதைத்த போது, பிரதமர் இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை விடுவதற்கோ அல்லது கருத்து சொல்வதற்கோ முக்கியமான ஒரு விடயம் அல்ல எனவும் இதனை பொருட்படுத்தாமல் விடுவதே சரி எனவும் கூறினார்.
அவர் மேலும் இதே குழு முன்னர் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீராவையும் சந்தித்தனர் என்றும் 2 அல்லது 3 மாதங்களில் அது அர்த்தமற்றதாக போய்விட்டது என்றும் அக்குழுவின் இப்போதைய நடவடிக்கைக்கும் அதே நிலை தான் ஏற்படும் என்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்துச் சொன்னால், இதற்கு ஒரு முக்கியத்துவம் வந்துவிடும் என கூறினார். அமைச்சரவையும் அதனை ஏற்றுக் கொண்டது.
பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜை IBC ஊடகம் தொடர்பு கொண்டு வெளிவந்த பிரகடனம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலை என்ன என கேட்டபோது அரசியல் துறை அமைச்சர் பிரதமருடன் கலந்து ஆலோசித்து பின்வரும் செய்தியை வெளியிட்டார்.
உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளை நாம்பொருட்படுத்த வில்லை. முன்னரும் மங்கள சமரவீரவுடன் இத்தகைய விடயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு காலாவதியானது அனைவரும் அறிந்த விடயம் என நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால்பெரும் இனப்படுகொலையின்ஊடாக தமிழர் தேசம்ஆக்கிரமிப்புக்குஉள்ளாகியிருப்பதோ, இராணுவ - சிங்கள - பௌத்த மயமாக்கலில்சிக்குண்டுள்ள தமிழர் தேசத்துக்குசர்வதேச பாதுகாப்புபொறிமுறையின் அவசியம்குறித்தோ, தமிழினப்படுகொலைக்குபொறுப்புக்கூற வைக்கசிறிலங்காவை சர்வதேசகுற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதுகுறித்தோ, தமிழர்களுக்கானஅரசியல் தீர்வுக்குதமிழர்களிடத்தில் ஓர்பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பது குறித்தோ, இவ்விதமான நிரந்தர அமைதியோஎன்பது, இனஅழிப்புக்கு உள்ளானஇனத்துக்கான பரிகாரநீதியும்அதற்கான பொறுப்புக்கூறலும்நிகழாதவரை சாத்தியமற்ற ஒன்று. இதனைவிடுத்து கட்சிரீதியாகவோஅல்லது அமைப்புரீதியாகவோயாராவது இவ்வாறுமுன்னெடுக்கப்படுகின்றசெயற்பாடுகள், தமிழர்தேசத்தினால் நிராகரிக்கப்படுமன்றிஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழமே ஈழத்தமிழ் தேசிய பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றும், அதனை அடைவதற்கான மூலோபாயம் சர்வ தேசத்தின் பங்கு பற்றுதலுடனான பொதுவாக்கெடுப்பு என்ற நிலைப்பாட்டில் அசையா உறுதியுடன் உள்ளது. இப்பிரகடனம் வந்தபின்னர், பிரதமர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருது வழங்கல் நிகழ்விலும், பாலா அண்ணாவின் நினைவேந்தல் நிகழ்விலும் ஆங்கிலத்திலும் (கனடிய அரசியல் தலைவர்களுக்கு தமிழரின் நிலைப்பாட்டை அறியச் செய்வதற்கு), தமிழிலும் வழங்கிய உரைகளில் தமிழீழம் தொடர்பாகவும் பொது வாக்கெடுப்பு தொடர்பாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்தியம்பினர்.
பிரதமர் அடிக்கடி கூறுவார், தலைவர் தன்னுடன் கதைக்கும் ஒரு சமயத்தில் கூறியதாக, அதாவது சில விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை, அது தானாகவே உடைந்து விடும் என்று.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு புதுமையான அரசியல் கருத்து (innovative political concept) ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும், இந்திய அமெரிக்க அரசாங்கங்களிற்கும் கருத்தியலில் சமமான ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழர் நலன்களுக்கு முரணாக அரசாங்கங்கள் கருத்துச் சொல்லும் போது அவற்றிற்கு எதிர்வினை ஆற்றுவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாகும். அமைப்புக்களின் ஒவ்வொரு கருத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்வினை ஆற்றின் அது "அரசாங்கம்" என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு அமைப்பாக மாறிவிடும்.
மேலும் நமது எதிர் வினை என்பது வெறும் அறிக்கைகளாக இல்லாமல் செயல்பாடுகளாக இருப்பதே பொருத்தமானது. தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்திற்கு தகுந்த மறுமொழி "பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தை” மாதிரி வாக்கெடுப்புகள் மூலமாகவும், வெளிநாட்டு பாராளுமன்றங்கள, மாநில அரசுகள், நகரசபைகள் ஊடாக தீர்மானங்கள் மூலமாகவும் ஊர்வலங்கள் மூலமாகவும், மாநாடுகள் மூலமாகவும் பலப்படுத்துவதே ஆகும்.