சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்: தமிழகத்தின் தற்போதைய நிலை(video)
04 Dec,2023
தமிழகத்தை சூழ்ந்துள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் இருந்து, 150 கி.மீ. தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிளான கனமழை மற்றும் அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது.
தொடர்கின்ற கடும் புயல் மற்றும் மழை காரணமாக வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது, தொடருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை வெள்ள நீரால் நிறைந்துள்ளது.
தொடருந்து சேவைகள் இரத்து
இதன் காரணமாக சென்னையில் புறநகர் தொடருந்து சேவைகள் இரத்து செய்யபட்டுள்ளது, அதற்குப்பதிலாக மணித்தியாலத்திற்கு ஒரு முறை என சிறப்பு தொடருந்து சேவை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து வீசும் பலத்த காற்றுக் காரணமாக மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளதனால் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதால், பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் சென்று இருவரை மீட்டுள்ளதுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு அசாதாரண சூழல் காணப்படுகின்றமையினால், பொதுமக்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது.