இளம் தம்பதி விபரீத முடிவு தூக்கிட்டு தற்கொலை
21 Nov,2023
மட்டக்களப்பு - திருக்கோவில் பிரதேசத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கணவனும் மனைவியும் இன்று (21) அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோகரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய நிலுயா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இருவரும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகி இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் உறவுகளினால் சீரழியும் பதின்ம வயது சிறுமிகள்; பெற்றோரே அவதானம்!
காதல் உறவுகளினால் சீரழியும் பதின்ம வயது சிறுமிகள்; பெற்றோரே அவதானம்!
தம்பதி உயிரிழந்த காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் இளம் கணவ - மனைவி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.