மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது: கிளிநொச்சி பொலிஸார்
20 Nov,2023
மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் அவர்களின் அடையாளர்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19.11.2023) ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் மற்றும் பொதுச் செயலாளரர் ச.கீதனும் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய சின்னங்கள் எவையும் பயன்படுத்தக் கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கார்த்திகை பூவை கூட பயன்படுத்தக் கூடாது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும் தாம் பொலிஸாரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார்.