வரலாற்று வளர்ச்சியில் அதிர்ச்சி காரணி.
கடந்த காலத்தை அதிர்ச்சியும் ஆச்சரியமுமில்லாததாகப் பார்ப்பவர்கள் ஆச்சரியங்கள் நிறைந்த எதிர்காலத்தைப் பெறுவார்.
இலங்கை வரலாற்றில் அதிர்ச்சி ஆத்திரமூட்டல்கள் ஆற்றிய பங்கு சொல்லும் தரமன்று.
கடந்தகால தீமைகளை நினைவில் வைத்துக் கொள்ளவும் அவற்றின் காரணங்களை உணரவும், எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவிக்கவும் வரலாறு நமக்கு உதவுகிறது.
கடந்தகால தீமைகள், தந்த கசப்பான அனுபவங்கள் எதிர்காலத்தில் நமக்கு வரும் தீமைகளுக்கு எதிராக பரிகாரங்களை வழங்குகின்றன.
‘வரலாறு என்பது கடந்தகால அரசியல், அரசியல் என்பது நிகழ்கால வரலாறு.’
எதிர்காலம் ஒருபோதும் கடந்த காலத்தைப் போல் இருக்க முடியாது. பொதுவாக, அது அப்படி இருக்கவும்; கூடாது.
ஆனால் கடந்த கால நிலைமைகளும் அதிர்ச்சி தந்த அனுபவங்களும் எதிர்காலத்தில் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கான தடயங்களை வழங்குகின்றன. அதுதான் வரலாற்றின் மாபெரும் சக்தி. அதுதான் வரலாறு தெரிந்தவர்களின் மாபெரும் சக்தியுங்கூட.
1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெல்ல வைப்பதற்காக,
1976ல் பல எஸ்டேட் லைனில் தொடர் குண்டுவெடிப்பு நடாத்தப்பட்டது. டெல்ரா, சங்குவாரி, பத்தனை, தொளஸ்பாகை போன்ற பல பத்து எஸ்டேட்களில் சீருடை அணியாத இரர்ணுவக் குண்டர் படைகளால் இந்த ஆத்திரமூட்டல்களும் அழிவு வேலைகளும் செய்யப்பட்டன.
சிவனு லக்ஷ்மணன் என்ற பத்தனைத் தோட்டத் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். பேராதனை பல்கலைக்கழகத்தில் வீரசூரிய என்ற மாணவர் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டார்.
1977 பாரளமன்றத் தேர்தலில் இந்த அதிர்ச்சி அலைகள் ஜே.ஆர்.ஜெயவர்தனவை ஐந்தில் நான்கு பாராளமன்றப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வந்தது.
அதனோடு சமசமாஜக்கட்சி கட்சி, கம்யூனிசக் கட்சி இரண்டுமே பாரளமன்றுத்துக்குச் செல்லவிடாமல் தோற்கடிக்கப் பட்டன. அந்தத் தேர்தலோடு அந்த மாபெரும் இரண்டுகட்சிகளின் வரலாறும் முடிவடைந்தது.
சோஷலிசம் பலவீனமடைந்தால் ஜனநாயகம் பலவீனமாகிப் போகும் என்று றோசா லுக்சம்பேர்க் தனது ஷசீர்திருத்தமும் புரட்சியும்’ என்ற புத்தகத்தில் மிகத்தெளிவாக அடித்துக் கூறியுள்ளார். 1977 தேர்தலில்
தமிழர் விதலைக்கூட்டணி எதிர்க்கட்சியானது. அதனோடு தமிழ் மக்களின் சோகவரலாறு தொடங்கியது.
இலங்கையில் இரும்பும் நெருப்பும் கோலோச்சத் தொடங்கியது. இது இலங்கை நாகரீகத்தின் பின்னடைவை வெளிப்படுத்திக் காட்டிய லிட்மஸ் காகிதம்.
எதிர்க் கட்சியான தமிழர்விடுதலைக் கூட்டணிக்கும் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்; இடையிலான தேன்நிலவும் ஒருங்கிணைப்பும் மற்றும் வர்க்கத்தொடர்பும் மூன்று தசாப்தங்களாக தமிழர் விரோதப் படுகொலையையும் நீடித்த உள்நாட்டுப் போரையும் கொண்டு வந்தது.
அது இலங்கை நலன்புரி அரசின் பொருளாதார அடிப்படையை நிர்மூலமாக்க மூன்றுதசாப்தகால உள்நாட்டுப்போருக்கு வழி திறந்தது.
இன்றும் படித்த தமிழ் மக்களுக்கு ஏகாதிபத்தியம் என்ற சொல்லு காதிலே நாரசம் ஊற்றுவது போன்ற உணர்வைக் கொடுக்கும். இன்றும் தமிழ்மொழியென்ற உலகச் செம்மொழியில் ஷஜனநாயகம’; பற்றிய ஒரு புத்தகமும் இல்லையாகும்.
1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கம் புதிதாக ஒரு புதிய தமிழ் எதிர்ப்பு இனவாதத்தைத்தை உருவாக்கியது.
இனப்படுகொலைகளுக்கு மத்தியில் ஜே.ஆர்.ஜெயவர்தன அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப் படுத்தினார். போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்ற சூழுரையை வானோலிமூலம் அறிவித்தார்.
இதன் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
இது 1978 இல் இலங்கைத் தீவில் முதல் தடையற்ற வர்த்தக வலயத்தை (எப.;ரி.சட்) உருவாக்க வழிவகுத்தது, தற்போது அது ஏற்றுமதிச் செயலாக்க வலயம் என்று அழைக்கப்படுகிறது, இது கட்டுநாயக்காவில் உள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அந்நிய செலாவணி டாலர் கழுவப்பட்டது. கைஇருப்புப் பணப் பற்றாக்குறை நெருக்கடி தொடங்கியது.
1979 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையில் ஒரு தற்காலிகச் சட்டமாகக் கொணரப் பட்டது.
சந்தேக நபர்களைத் தேடுவதற்கும், கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் இது காவல்துறைக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியது.
ஆள்கொணர்வு மனு சாசனத்தில் நடைமுறைப்பிரயோகம் அற்றுப்போனது. சுட்டக் கொல்லப் பட்டவரை அந்த இடத்திலேயே புதைப்பது வழக்கத்துக்கு வந்தது. இலங்கை முழுவதும் சுடலையானது. மாவீரர் துயிலும் இல்லங்கள் என்ற கலைக்கூடங்கள் உருவாகின.
1980 பொது வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டது.
100,000 வேலைநிறுத்தக்காரர்கள் வேலை இழந்தனர்.
1981 இல் இரத்தினபுரி பிரதேசங்களைச் சுற்றியுள்ள மலையகத்தில் இரண்டாவது இனப் படுகொலை ஆத்திரமூட்டப் பட்டது. இதனையடுத்து.
1981 இல் யாழ்பாண நூல்நிலையம் எரியூட்டப்பட்டது. ஒரு தேர்தல் வெற்றிக்காக நூல்நிலையம் எரியூட்டப்பட்டது இதுவே உலகவரலாற்றில முதற்தடவையாகும்.
1982 இல் பயங்கரவாதத் தடைச் சட்டம்; ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நிரந்தரச் சட்டமானது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை பயங்கரவாதச் சட்டத்தின் கீழேயே ஆட்சி நடாத்தப்படுகிறது. அவசரகாலச் சட்டமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் இல்லாமல் இலங்கையில் ஆட்சி நடாத்த முடியாது.
இந்த முன்தயாரிப்போடுதான் இலங்கையில் 30 வருட யுத்தம் செயற்கையாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப் பட்டது.
1983 ஜூலை 24 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கி, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த படுகொலை விரைவில் குறிப்பிடத்தக்க சிங்களப் பொதுமக்கள் பங்கேற்புடன் பாரிய வன்முறையாக மாறியது.
ஏழு நாட்களுக்கு மேலாக, இராணுவ உளவுப் பிரிவும் முக்கியமாக சிங்களக் கும்பல்களும் தமிழ் மக்களைத் தாக்கி, எரித்து, சூறையாடிக் கொன்றது.
இலங்கையில் எத்தனையோ வர்க்கப்போராட்டக் கழங்களைக் கண்ட சிங்களமக்களின் மனோநிலை திடீரென்று தமிழ்விரோதமாக மாற்றக்கூடிய மட்டத்துக்குப் பரிணாமமடைந்து விட்டது.
மடைதிறந்த காட்டு வெள்ளம்போலத் தமிழ்விரோதத்தை ஏற்படுத்த ஒர் அற்ப செயற்கையான ஆத்திரமூட்டலே போதுமானது. பல சமூகப் புரட்சிகள் தொடர்ந்து வந்தாலொளிய சிங்கள மக்களிடையே கிளடுதட்டி மலடுதட்டிப்போய் படிமமாகப் போயுள்ள தமிழ்விரோதக் கலாச்சாரத்தை அடிச்சுவடு இல்லாமல் அகற்ற முடியாது.
உதிர்த்த ஞாயிறுக் கொலைகளின் பின்னணியை ஆளமான அத்திவாரத்தை உலக அரசியலின் ஒரு பாகமான இலங்கை அரசியல்வாழ்வை விளங்கவே முடியாது.
1983 யூலை தமிழ் இனஒழிப்பில் 3000 முதல் 4000 வரையிலான கொலைகள் எண்ணிக்கையின் மதிப்பீடு, 150000 பேர் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். 10000 தொழிற்சாலைகள் சிறியதும் பெரியதும் தீக்கிரையாக்கப்பட்டன.
இன்றுவரை தமிழ்பேசும் மக்கள் ஐக்கிய இலங்கையில் நிம்மதியாக வாழமுடியாத சூழலே உள்ளது.
சிங்கள அதிபெரும்பான்மை மக்களின் மனேநிலையானது சில மில்லிசெக்கண்டிலேய மாபெரும் தமிழ்விரோத எழுச்சியாக, சூறாவளியாக, சுனாமியதக, மாற்றத்துக்கு உள்ளாகி விடுகிறது.
சிங்களப் புத்தபிக்குகள் எவரும் விதிவிலக்கில்லாமல் தமிழர் கொலையைத் தூண்டுபவர்கள் என்பதைச் சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்த முடியும்.
அவர்களது முழு உலமும் சிங்களம் சிறுபான்மையாகப் போகிறது. புத்த சமயம் அழியப் போகிறது.
முழுச் சிங்கள ஊடகமும் தமிழ்விரோதத்தை நாளாந்தம் மடைதிறந்துவிடும். பாராளமன்றத்திலே சிங்கள மொழியே நாட்டாண்மை. நீதிபதிகள் முழுப்பேருமே தமிழ் விரோதிகள். அரச அதிகாரிகள் அத்தனைபேருமே தமிழ் விரோதிகள். தொல்லியல் துறை இலங்கை முழுவதையும் சிங்களமயமாக்குவதில் அயராது உழைக்கிறது.
சீறும் புயலிலும் மழையிலும் அக.ப்பட்ட சிறு துரும்பு போலவே இலங்கைத் தமிழினத்தின் எதிர்காலம் நகருகிறது.
இலங்கைத் தமிழினத்துக்கு உலக ஏகாதிபத்தியம் என்ற எண்ணக்கரு புரியாத புதிராக இருப்பதால் அது முன்னோக்கிப் போகமுடியாமல் ஏங்கல்சின் மொழியிற் சொன்னால் ஷவரலாறு இல்லாத இனமாகி’ அழிந்துகொண்டிருக்கிறது.
உலகவரலாற்றில் முனனேற்றத்துக்குத் தடையான ஆயிரக்கணகான தேசிய இனங்கள் அழித்தொழிக்கப் பட்டிருக்கின்றன என்பது அசைக்க முடியாத உண்மையாகும்.
1916 இல் லெனின் அயர்லாந்து பற்றி எழுதிய கட்டுரையை வாசித்தாலே இதை விளங்கப் போதுமானது. தேசிய இனங்கள் பற்றிய லெனினது பரஞானமே 1917 ஒக்டோபர் புரட்சிக்கான வேலைத்திட்டத்தை வளங்க வழிதிறந்தது.
மற்றய இனங்களை ஒடுக்கும் இனமொன்று ஒருகாலமும் மீட்சியடையாது. அப்படி ஏதும் ஒரு அரசு சில வரலாற்றுத்தற்செயல் விபத்துக்களால் உருவாகினாலும் அது மீண்டும் அழிவது நிச்சயம் என்பதுதான் மார்க்சியம் கற்றுத்தந்த பாடம்.
இதை நிரூபிப்பது மிகவும் எழிதானது. யாழ்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் வெளியேற்றப்பட்டதன் சாபத்தை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் இப்பொழுது அனுபவித்தார்கள். 1983 இனக்கலவரத்தை அனுமதித்தற்கு இன்று சிங்களம் வட்டியும் முதலும் செலுத்துகிறது. ஆத்திரமூட்டல்களைத் தோற்கடிக்கத் தெரியாதவர்கள் அரசியல் வரலாற்றில் வென்றது கிடையாது.
அண்மைய இலங்கையின் அதிர்ச்சி அரசியலை ஒரு தடவை உற்று நோக்குங்கள்.
இலங்கையில் புதன் மே 11, 2022,- 65 அரசியல்வாதிகளின் வீடுகளை யாரோ எரித்தனர். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடு மேலும் குழப்பத்தில் மூழ்கியது. அரசாங்கம் துருப்புக்களுக்கு ‘கண்ட இடத்தில்; சுட’ உத்தரவிட்டது.
அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது அல்லது அதிகாரிகளை தாக்குவது யாராக இருந்தாலும் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சு துருப்புக்களுக்கு உத்தரவிட்டது.
நாட்டின் பதவி விலகும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராணுவம் காப்பாற்ற வேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதுவும் அமெரிகத் தூதர் யூலி சங் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பின்னரும் வெரட்டிய பின்னருமே இராஜிநாமாச் செய்தார்.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணி தொடக்கம் காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சிவைத்தில் இந்த வீடுகளை யார் எரித்தார்கள் என்பதை இன்றுவரை அரசாங்கமோ பொலிசோ சொல்லவில்லை.
தொடக்கத்தில் அந்தப் பழியைப் பாராள மன்றத்தில் ஜே.வி.பிமேல் போட முனைந்தார்கள். பாராளமன்றத்தில் ஜே.வி.பி பாராளமன்ற அங்கத்தவர் விஜிதா ஹோரத் மறுக்கவே அதை ஜே.வி.பி செய்யவில்லை என்பது நிரூபணடானது.
இந்த எரிப்பின்போது வீடுகளின் அங்கத்தர் எவரும் பாதிக்கப்படவில்லை. நாய் பூனைகூடப் பாதிக்கப்படவில்லை. ஒவ்வொரு பாராளமன்ற அங்கத்தவர்கள் வீடுகளுக்கும் பொலீஸ்பாதுகாப்பு இருந்தது. அதிகமாக ஒவ்வொரு வீடுகளும் சீ.சீ.ரி.வீ கமறா இருந்தது.
அதிகாமான வீடுகள் எரியூட்ட முடியாது கற்களால் கட்டப்பட்டவை. ஏரித்தவர்களின் புகைபபடங்கள் இருப்பதாகப் பொலீஸ் கூறியது.
நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகள் புதினமும் விடுப்பும் பார்க்கப் போய் கைத்தொலைபேசிகளில் புகைப் படங்கள் எடுத்தனர். அவர்கள் அனேகர் கைத் செய்ப் பட்டனர். புகைப் படமெடுத்த ஐகத்தொலைபேசிகள் பறிக்கப் பட்டன.
உதிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளான இராணுவப் புலனாய்வுத்துறையே இதைச் செய்தது. ஹோல்பேஸ் போராட்ட காரர்களும், ஜே.வி.பி யும் இப்படி ஆத்திரமூட்டலகளை இலங்கை அரச உளவுத்துறை செய்யும் என்பதை எதிர்பார்த்து மிகவும் கங்காணிப்போடு இருந்ததால் ஒரு அமைப்பையும் ஆதாரபூர்வமாகக் குற்றஞ்சாட்ட முடியவில்லை.
வீடுகள் எரிக்கப்பட்டன என்று அடிக்கடி சொல்வர்களேயொளிய ஆர் எரித்தார்கள் என்பதைச் சொல்வதில்லை.
இவ்வளவு வீடுகளை ஒரு நிறுவனமின்றி ஒரே நேரத்தில் கறாராக எரித்துவிட முடியாது. இலங்கை எங்கே குண்டுவெடித்தாலும் எங்கே கொலைசெய்யப்பட்டாலும் அது அரசபுலனாய்வுத்துறை செய்தது என்று மக்கள் உடனடியாகக் கூறுமளவுக்கு அரசியல் உணர்மை அடைந்திருக்கிறார்கள்.
இன்றும் ரணில் விக்கிரமசிங்கா மற்றுமொரு தேர்தலை நடாத்தமாட்டார் என்பதை இலங்கை மக்கள் நன்றாகவே உய்த்துணர்ந்தருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கா வாக்களர்களின் வாக்கு எண்ணிக்கையிலோ பெரும்பான்மையிலோ தங்கி இருக்கவில்லை. அவர் இராணுவத்திலும் பொலீசிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் மாத்திரமே தங்கியுள்ளார்.
அவருக்கு மில்லியன்கணக்கான ஹோல்பேஸ் போராட்டக் காரர்களின் எண்ணிக்கை என்பது பொருட்டே அல்ல. ஒரு ஏகாதிபத்தியக் கைக்கூலிக்குத் தனது பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்.
இலங்கையில் தேர்தல் நடந்தாலென்ன நடவாது விட்டால் என்ன ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் ஒரு போலீஸ்; இராணுவ சர்வாதிகார ஆட்சி வருவது உறுதி.
உலகபொருளாதாரத்தின் தொடர்ந்த வீழ்ச்சியும் உலக அரசியலும் பழைய வழிகளில் ஆட்சி செய்ய முடியாத நிலையும் உலகநாணயமான டொலரின் செல்லுபடியில்லாத் தன்மையும் அதனால் உலக வர்த்தகம் முரண்பாடின்றித்தொடர முடியாத தன்மையும் பொதுவாக உலகமக்களின் நுகர்திறன் பெருமளவில் வீழ்நத்தும் அதனால் பண்டங்களின் விற்பனை உலகச்சந்தையில் மீட்கமுடியாத மட்டத்துக்கு வீழ்ந்தது போன்ற ஒட்டுமொத்த உலகமுதலாளித்துவ நெருக்கடி இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கான கதவுகளை முற்றாகவே அடைத்துவிட்டன.
சோஷலிசம் அல்லது பொலீஸ் இராணுவ காட்டமிராண்டித்தனம்.
உலக பொருளாதாரமும் உலகச் சந்தையும் உலக அரசியலும் கோலோச்சும் எமது சகாப்தத்தில் எந்த மனிதனும் தான் கனவு கண்டதுபோல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது.
அதுவும் நாம்வாழும் சகாப்தம் உலகரீதியில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் சகாப்தம். பெருக்கெடுக்கும் ஆற்றில் விழ்ந்த படகுபோல அந்த நீரோட்டத்தில் அள்ளுப்பட்டு அடிக்கடி ஏற்படும் எதிர்பாராத விபத்துகளால் மனிதர்களது வாழ்க்கை ஓட்டம் அடிக்கடி திசைமாறிச் செல்லும்.
ஒவ்வொரு திடீர், கொந்தளிப்புச் சூழலுக்கும் ஒத்துப்போக முடியாத மக்கள் அழிந்து போனார்கள்.
தப்பிப் பிழைப்பதற்கு ஒரு சின்ன அதிர்ஷ்டம் எப்பொழுதும் தேவைப்படுகிறது. நான் வளர்ந்து வாலிபப் பராயத்தை அடைந்து நனவான மனிதனாக வாழ்ந்த காலம் முழுவதும் இலங்கை எப்போதும் ஒரு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை அனுபவித்தே வந்தது.
ஏறத்தாள எல்லாக் காலங்களும் ஓர் உள்நாட்டு யுத்தகாலமாகவே எனது வாலிபம் முழுவதும் கடந்து சென்றது.
எனது தந்தையார் மொகமட் அலியாஸ் மொகமட் மிஹிலார் 1971 இளைஞர் எழுச்சியில் றோகண விஜயவீராவின் இயக்கத்தில் அங்கத்தவராக இருந்தவர்.
1985 ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இணைந்து செயற்பட்டவர்.
1987 முதலாவது வடகிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர்.
வடகிழக்கு மாகாண முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் கீழ் மாகாண அரசாங்கத்தின் ஒரு அதிகாரியாகத் திருகோணமலையில் பணியாற்றினார்.
அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எப் பின் மத்திய குழு அங்கத்வராக இருந்தார். திருகோணமலையில் 1990 இந்திய சமாதானப் படை இலங்கைக்கு அழைக்கப்பட்ட(ஐ.பி.கே.எஃப்) காலகட்டத்தில் மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் அவர் பத்மநாபா உள்ளிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர்களுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.
ஈ.பி.ஆர்.எல்.எப்-ன் தலைவராக இருந்த பத்மநாபா 1990 ஜூன் 19 அன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அவரது கட்சிக்காரர்கள் 12 பேர்களோடு சேர்த்துத் தமிழீழவீடுதலைப் புலிகள் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களுள் எனது தந்தையும் ஒருவர். இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இலங்கைக்கு வெளியில் நடந்த நிகழ்வாக அமைந்தது. அப்பொழுது எனக்கு வயது 7.
எனக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் இருக்கின்றனர்.
நான் பிறந்த ஊர் மருதமுனை.
நான் ஆரம்பம் முதல் உயர்தராதரம் வரை கல்வி கற்றது மருதமுனை சாம்ஸ் மத்திய கல்லூரி.
எனது பல்கலைக் கழகப் புகுமுகச் சித்தி 2003.
பேராதனைப் பல்கலைக் கழகப் புகுமுகம் 2003-2004.
பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கையில் தினமுரசு பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் சம்பாதித்து எனது கல்வியைத் தொடர்ந்தேன். அதிகமாக அந்நாளைய அரசியல் நிலவரங்களின் ஆய்வை எழுதுவேன். அந்த வருமானம் என் கல்விக்கான செலவை ஓரளவுக்கு ஈடுசெய்தது.
பல்கலைக் கழகத்தில் விரிவுரைகள் அப்பொழுது நான்கு நாட்கள்தான் இருந்தன. வார இறுதியில் தலைநகரான கொழும்புக்கு வந்து தினமுரச பத்திரிகைக் காரியாலயத்தில் எனது கட்டுரைகளைத் தட்டச்சு செய்து சரிபார்த்து மற்றய உதவிகளும் செய்து வந்தேன்.
எங்கள் தேசம் என்ற பத்திரிகைக்கும் அரசியல் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிப் பணத்தேவையைச் சமாளித்தேன். குடும்பத்தலைவன் இல்லாததால் ஏற்பட்ட சுமை அது.
அப்பொழுது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறு கைத்தொழில் மற்றும் வடமாகாணப் புனருத்தாரண அமைச்சராக, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிர்வாகத்தில் இருந்தார். 2006 இல் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குச் செயலாளாராகப் பணிபுரியும் ஒரு வேலை வளங்கி உதவி செய்தார்.
2004 கிழக்கு மாகாண விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவுண்டு கருணா ஒரு புதிய ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்திருந்தார்.
வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக கருணாவின் அரசியல் கட்சியை சட்டபூர்வமாக இயங்குவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்க அனுமதிக்கவில்லை. ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சி முழுவதும் கருணா நேபாளத்திலும் இந்தியாவிலும் தலைமறைவாகவே வாழ்ந்தார்.
மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி ஜனாதிபதியாக தனது முதல் ஆறு வருட காலப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
2006, ஏப்பிரலில் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்னை வரும்படி தனது வாசஸ்தலத்துக்கு அழைத்திருந்தார். அது கொழும்பு லியாஸ் றோட்டில் அமைந்திருந்தது.
2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருணாவின் அரசியல் கட்சியைச் சட்டரீதியாக செயற்பட அனுமதித்தார்.
திரு. டக்ளஸ் தேவானந்தா என்னை அழைத்துச் சொன்னார்ஷ கருணா அம்மானை உனக்குத்தெரியுந் தானே. அவர்கள் ஓர் ஜனநாயக அரசியற்கட்சியாகச் செயற்பட முயற்சிறார்கள். இப்பொழுது அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருக்கிறது.
அவர்களுக்கு ஜனநாயக அரசியல் அறிவு போதிய அளவு கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. வரலாற்றின் நிபந்தனையும் நிர்ப்பந்தமும் அது.
அவர்களுக்கு விசுவாசமாக உதவியும் ஒத்தாசையும் செய்பவனாகப் பணியாற்றும் பொறுப்பை நீ எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நான் அதற்கு இசைந்தேன். நான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது கருணா, பிள்ளையான், குகனேசன் ஆகிய மூவரும் அங்கு வந்தனர். அவர்களை அமரச் சொல்லிவிட்டு பின்னர் என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நீ இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நான் கருணாவிடம் பணியாற்றச் சென்ற பொழுது கருணாவுக்கு எனது பத்திரிகைச் செயற்பாடுகள் தெரிந்திருந்தன.
அவரது முதல்வேண்டுகோள் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகள் கீழ்மாகாணத்தில் நடாத்திய தமிழ்அலைப் பத்திரிகையை மீண்டும் தொடர உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
நான் தமிழ் அலை ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அதனோடு கூடவே பல மற்றய பொறுப்புக்களும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டது.
இது ஒரு தொழில் மாத்திரமல்ல ஒரு விசுவாசமான இலங்கைப் பிரையை என்ற முறையில் ஒரு ஆயுதக் குழுவை ஜனநாயகமயப்படுத்தவேண்டிய கடமைப்பாடும் எனக்கு இருந்தது.
வெளி ஊடகங்களை இங்கிதமாகவும் சாணக்கியமாகவும் கையாளும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. கருணா குழுவிலிருந்த எல்லோரும் அன்றய திடீர் அரசியல் சூறாவளியின் நிர்ப்பந்தத்தால் ஏறத்தாள கல்வியை இடைநடுவே விட்டவர்கள்.
ஆதலால் தமிழ் சிங்கள ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யும் பணியும் எனக்குத் தரப்பட்டது. அத்துடன் வெளிநாட்டுத் தூதரகங்களைத் தொடர்பு கொள்வதற்கும், இராஜதந்திர ரீதியில் உணர்திறன் கொண்ட, இங்கிதம் தெரிந்த, கலாச்சார ரீதியாக மெருகூட்டப்பட்ட நன்கு சமகால விடயங்கள் அறிந்த அறிவுள்ள நபர் ஆகவும் நான் அவர்களால் இனங்காணப் பட்டேன்.
பாதுகாப்புக்காக கொழும்பு பொரளை இராணுவ முகாமுக்கு அருகாமையில் பத்திரிகை வேலைக்கும் அரசியல்வேலைக்கும் ஒரு கட்டிடம் தரப்பட்டது. பின் அங்கிருந்து கொழும்பு நாரகன் பிட்டி பகுதியில் இராணுவ பாதுகாப்புடன் பத்திரிகை மற்றும் அரசியல்வேலை செய்வதற்காக ஒரு கட்டிடம் தரப்பட்டது.
அங்கே கருணா பிள்ளையானோடு; நானும் ஏறத்தாள முழு நேரமும் வேலை செய்தோம்.
பயங்கரவாதிகளாக சைனைட் குப்பிகளோடு தற்கொலைக் குண்டுக் கவசத்தைப் போட்டுக் கொண்டு திரிந்தவர்கள் ஜனநாயக வாழ்கைக்கு வந்தது சநதோஷமாகவும் அவர்களை நாகரீக மனிதர்கள் ஆக்கும் பணியில் பங்களிப்பது எனக்;கும் கடைமைப்பாடாகவும் இருந்தது.
கருணா எனக்கு உடனேயே ஒரு கைத்தொலைபேசியும் தொடர்புகொள்ள வேண்டடிய தொலை பேசி எண்களையும் தந்தார்.
சிறிது சந்தேகங்களும் பயமும் இருந்த போதும் அவர்களோடு நிதானமாகவும் கவனமாகவும் அகலாமல் அணுகாமல் வேலைசெய்யத் தொடங்கினேன்.
உயர் பொறுப்புகளில் இருப்பவர்களோடு அருகில் இருப்பது ஆபத்தானது என்ற உள்ளுணர்வு என் மனதுள் எப்பொழுதுமே இருந்துகொண்டுதான் இருந்தது. எந்த மனிதனும் மாற்றத்துக்கு உட்படாமல் இருக்க முடியாது என்பதை மனிதவாழ்வியல் நிறுவியுள்ளது.
தமிழ் அலை மாதத்துக்கு இரண்டு பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது.
என்னுடைய வதிவிடம் பாணந்துறையில். பத்திரிகைக் காரியாலயம் பொருளை விமானத்தளத்தக்கு அருகாமையில். பிள்ளையான் சொன்னார் நெடுகப் பயணம்செய்வது பாதுகாப்பற்றது. இங்கேயே இரு என்று சொன்னார்.
இப்பொழுது படிப்பை இடைநிறுத்த யோசித்தேன்.
பத்திரிகைக் காரியாலயம் பொருளையிலிருந்த நரகன்பிட்டி இராணுவ முகாமுக்குப் பக்கத்தில,; பாதுகாப்புக்காக மாற்றப் பட்டது. ஓர் இரட்டைமாடிக் கட்டிடம் கிடைத்தது.
மேலே அரசியற் காரியாலயம். கீழே பத்திரிகைக் காரியாலயம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளராகச் சிவகீதா பிரபாகரன் நியமிக்கப் பட்டார்.
இந்நாட்களில் இராணுவத்தோடான கலந்துரையாடலின்போது கருணாவுக்கு இராணுவமே மொழிபெயர்ப்பு வளங்கியது.
கருணா அவர்களது மொழிபெயர்ப்பை விளங்குவது அரைகுறையாக இருக்கிறது என்று சொல்லி அரசியற் கலைச் சொற்பாவனையும் வட்டாரத் தமிழ் மொழிவழக்குந் தெரிந்த என்னை மொழிபெயர்க்க வரும்படி கேட்டுக்கொண்டார்.
ஜூன் 2006 இல் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு கூட்டம்; நடந்தது. கருணா என்னை மொழிபெயர்பாளராகக் கூட்டிக் கொண்டு சென்றார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நான் அன்று முதன்முறையாகச் சந்தித்தேன்.
அந்த கூட்டத்திற்கு தேசிய புலனாய்வு தலைவர் ஜெனரல் கபிலே ஹெர்டே விதாரண வந்திருந்தார். அந்தக் கூட்டம் 3 மணித்தியாலங்கள் நடந்தன. அதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் கருணாக்களையும் எப்படிப் பாவிப்பது என்பது பற்றியே யோசிக்கப்பட்டது. கூட்டம் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது.
இந்நாட்களில் சரத் பொன்சேகாவுடன் இராணுவத் தலைமையகத்தில் மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது.
கருணா என்னை ரி.எம்.வீ. பியின் பேச்சாளராக நியமித்தார். நான் பி.பி.சி, ராய்ட்டர், டெய்லி மிரர,; தெரண போன்ற ஊடகங்களுக்கெல்லாம் பேட்டி அளித்தேன்.
மேல் மாடியில் நான் ரி.எம்.வீ.பியினருக்கு அரசியல் வகுப்புகள் எடுத்தேன். அவர்கள் பள்ளியை இடைநிறுத்திப் போராட்ட இயக்கத்தில் சேர வரலாறு நிர்ப்பந்தித்ததால் அவர்களுக்கு இலங்கை வரலாறோ இலங்கை இனப்பகை வரலாறோ, அரசியல் வரலாறோ தெரிந்திருக்கவில்லை.
பிரஜா உரிமை பறிப்பு, கள்ளத்தோணிச் சட்டம், தனிச் சிங்களச் சட்டம் ,1953 ஹர்த்தால், சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம,; செல்வனாயகம் பண்டாரநாயக்கா ஒப்பந்தம், தமிழ்மொழி விஷேட மஷோதாக் கலவரம், தரப்படுத்தல், வட்டுக்கோட்டை மகா நாடு, 1971 எழுச்சி, 1972 குடியரசுசச் சட்டம,, எஸ்.டபிளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை, திருமதி பண்டாரநாயக்கி கொலை முயற்சி, இலங்கைப் பல்லின வாழ்க்கை, காலனித்துவ காலக் கொடுமைகள், மங்கள முனசிங்கா ஆணைக்குழு அறிக்கை, சந்திரிக்கா தீர்வுப்பொதி, போன்றவை எல்லம் முதலிலிருந்து படிப்பிக்க வேண்டியிருந்தது.
இந்தக் கூட்டத்;துக்கு பிள்ளையான், இனியபாரதி, ஜெயம், மங்களம், சீலன,; ஜெயா போன்ற ரி.எம்.வீ.பியினர் எல்லாரும் வருவார்கள். அதன் பிறகு என்னை மாஸ்டர் என்று கூப்பிட அவர்கள் ஆரம்பித்தார்கள்.
சிறிது நாளில் பிள்ளையான் என்னை அழைத்துத் தங்களுக்கு ஒரு அரசியல் பேச்சாளர் வேண்டுமென்றும், அந்தப் பணியை என்னைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். எனக்கு அசாத் மௌலானா என்ற பெயரும் சூட்டிக் கொண்டனர்.
இப்படியே மெல்ல மெல்ல சந்தர்ப்பத்தினதும் வரலாற்றினதும் நிர்ப்பந்தத்தால் நான் ரி.எம்.வீ.பியின் எலும்பும் சதையும் இரத்தமும் ஆகிவிட்டேன்.
இதன் பின் எனக்கு தொடர்புகளுக்காக இரண்டாவது கைத்தொலைபேசியும் தரப்பட்டது. அரசியல் நிகழ்சிகளும் சம்பவங்களும் அறிக்கைகளும் முரண்பாடுகளும் உடனுக்குடன் என் தொலைபேசிக்கு அனுப்பப்பட்டன.
ஏறத்தாள ஊக்கமாகச் செயற்படும் எல்லாரோடும் அரசாங்க மற்றும் உச்சியிலுள்ள பாதுகாப்புப் படையினரோடும் அரசியல்வாதிகளோடும் தொடர்புகள் வளர்ந்துகொண்டே வந்தன. மாட்டன் என்று எனக்குச் சொல்லத்தெரியாததால் என்னால் சுமக்க முடியாத சுமைகள் கூடிக் கொண்டே வந்தன.
பிள்ளையானுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அமல் கணசேனவுக்கும் இடையேயான உறவுகள் வளரத்தொடங்கின.
சுரேஷ் ஷாலே
இப்பொழுது சுரேஷ் ஷாலேயுடனான(இவர் இன்று இராணுவப் புலனாய்வுத் தலைவராக இருக்கிறார்) உறவு ஏற்படத்தொடங்கியது. டி.எம்.வி.பி.க்கு பொறுப்பாளராக சுரேஷ் ஷாலே இராணுவ புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் மேயர் ஜேனரல் தர அதிகாரி.
கருணாவின் மக்கள் தொடர்பு பாராட்டத்தக்கதாக இல்லை. அவர் திடீர் திடீர் என ஏற்படும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கமடையும் நுண்மாண் நுழைபுலமும், நெகிழ்வுத் தன்மையும், தாராளமனப்பான்மையும் கொண்டவர் அல்லர்.
தன்னை வியப்பதில் எப்பொழுதும் புழகாங்கிதம் அடைபவர். அவர் எப்போதுமே தன்னை ராணுவ தளபதி என்று நினைத்துக் கொள்பவர்.
ஷமுட்டாள்தனமான அதிகாரிகளுக்கு நான் ஏன் தலைவணங்க வேண்டும் என்று நினைப்பவர். மற்றவர்களுடன் பேசுவதில் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி இருப்பதில்லை.
அவர் கோத்தபாய மற்றும் சரத் பொன்சேகாவுடன் மட்டுமே பேசுவார். அவர் விசுவாசமாக இரார் என்று இராணவப் புலனாய்வுப் பிரிவு கருதியது.
பிள்ளையான் எல்லோருடனும் பழகக்கூடியவர். அவர் மிக உயர்ந்த கேட்கும் திறன் கொண்டவர். தமக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பார் என இராணுவ புலனாய்வுப் பிரிவு நம்பியது.’
(பிள்ளையானுக்கென்று வள்ளளுவர் ஒரு குறளைப் பாடியுள்ளார்.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் வியந்து.-குறள் 1080-
கயவர், எதற்கு உரியவர்? அவருக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதிலிருந்து தப்பத் தம்மைப் பிறர்க்கு எவ்வளவு விரைவாக விலைகூறி விற்கமுடியுமோ அவ்வளவு விரைவாகத் தம்மை விற்றுவிடுவர்.)
முரண்பாடோடு உடன்பாடுடைய கருணா, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நான் ஒத்துழைத்து ஒருங்கிணைக்க வேண்டும்.
கரணம் தப்பினால் மரணம். அக்கால கட்டத்தில் கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் பல அரசியல் படு கொலைகளும், எண்ணற்ற இனந்தெரியாத கொலைகளும், ஆட் கடத்தல்களும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைளும் இடம் பெற்றன.