நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த கோரிக்கை
04 Oct,2023
தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதி ஆகியவற்றில் இருந்து சர்வதேச சமூகத்தை திசை திருப்புவதையும் நோக்கமாகக் கொண்டதே இலங்கையின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது உரையில், கடந்த பல ஆண்டுகளாக இலங்கையின் பத்துக்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை நிறுவியும் எந்த முடிவும் இல்லை.
ஆணைக்குழுக்களை நிறுவுதல் என்பது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான இலங்கையின் கருவியாகும்.
ஐ.நாவில் இலங்கையை கடுமையான சாடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த கோரிக்கை | Transnational Government Of Tamil Eelam Blame Gov
இம்முறை, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் ஒப்பிட்டு தன்னை நியாயப்படுத்த இலங்கை திட்டமிட்டுள்ளது.
ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது தென்னாப்பிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் என்பது பாதிக்கப்பட்டவர்களால் முன்மொழியப்பட்டதும் நிர்வகிக்கப்பட்டதுமாகும்.
உண்மைக்கான ஆணையங்கள்
ஆனால் இலங்கையில் பாரிய அட்டூழியங்களை நிகழ்த்திய வெற்றியாளர்களே இதன் முயற்சியை முன்வைக்கின்றனர். இதேபோன்ற வழிகளில் தொடங்கப்பட்ட முந்தைய 'உண்மைக்கான ஆணையங்கள்' தோல்வியடைந்துள்ளன.
ஏனெனில் நியமிக்கப்பட்ட ஆணையங்கள் பாதிக்கப்பட்டவர்கள் நம்பவில்லை. ஆணையங்களிடம் வாக்குமூலம் வழங்க முன்வந்த பல பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு தரப்பினராலும் மிக மோசமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கையின் முன்மொழியப்பட்ட “உண்மை ஆணையத்தை” பரிசீலிப்பதற்கு முன்னர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நீதியைப் பெறவழிகோள வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையினை வலியுறுத்துகிறோம் என மணிவண்ணன் தனது உரையில் தெரிவித்திருந்தார்.