ஒக்டோபர் முதல் நாகப்பட்டினம்- காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை!
26 Sep,2023
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த அதிவேக படகு சேவையானது 60 கடல் மைல் தூரத்தை கடந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து செயற்படத் தொடங்கும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு கடல்சார் சபை மற்றும் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்த உள்ளன.
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஒஃப் இந்தியாவினால் இந்த அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், துறைமுக கால்வாய் தோண்டப்பட்டு வருவதாக மாநில கடல்சார் சபை தகவல்கள் தெரிவித்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் இந்தச் சேவை இலங்கையர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்தம் முழு விவரம்
இந்தியா இலங்கை இடையே எரிசக்தி, யுபிஐ பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள், பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கையெழுத்தாகின. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணி நடந்து வருவதாக இருநாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும்