வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.
24 Sep,2023
இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, முக்கிய
திருகோணமலை அரசிமலை பகுதியில் முஸ்லிம் மக்களின் வயல் காணிக்குள் பௌத்த பிக்கு ஒருவர் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர் நேற்றைய தினமும் சென்று காணி உரிமையாளர்களிடம் மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று அடாவடித் தனத்தில் ஈடுபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றன.
குறித்த காணிக்கான அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளதுடன் இது தமக்கு சொந்தமான காணியெனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதேவேளை நேற்றைய தினம் குறித்த பிக்குவின் அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதேச மக்கள் மீது பிக்குவின் சகோதரன் தாக்குதல் நடத்திய நிலையில், பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..