இலுப்பைக்குளத்தில் விகாரைக்கு பெயர்  நாட்டிய பிக்குகள்!பதற்றத்தில் திருமலை. 
                  
                     10 Sep,2023
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பெயர் பலகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
	    
	திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அருகில் உள்ள இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
	 
	குறித்த பதாகை இன்று காலை பௌத்த பிக்குகள் சிலரால் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பதாகை நடப்பட்டதன் பின்னர், அப்பகுதியில் பொலிஸார் சிலர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.